Virat Kohli (Photo Credit: Twitter)

அக்டோபர் 09, சென்னை (Sports News): நேற்று சென்னையில் ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டித்தொடர் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலபரீட்சை நடத்திய நிலையில், இறுதியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் (Virat Kohli) 85 ரன்னும், கே.எல் ராகுலின் (KL Rahul) 97 ரன்னும் அணியின் ஸ்கொரை உயர்த்தியது. இருவரின் பார்ட்னர்ஷிப் போன்றவையால் அணிக்கு வெற்றி உறுதியானது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணி மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு பிபியை ஏற்றினாலும், இறுதியில் அசத்தல் வெற்றி அடைந்தனர். Capeless Hero: உயிருக்கு போராடிய நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்; துணிச்சலுடன் களமிறங்கி மீட்பு.! 

போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு முன்னதாக விராட் கோலி தனது ரசிகர்களுக்கு பயிற்சியின்போது ஆட்டோகிராப்பும் வழங்கினார். இந்நிலையில், விராட் கோலி ஒருநாள் உலகக் கோப்பையில், இந்திய அணிக்காக அதிக கேட்சுகளை பிடித்த பீல்டராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். முன்னதாக அணில் கும்ப்ளேவின் சாதனை முறியடிக்கப்பட்டது.