December Holiday: அடேங்கப்பா.. டிசம்பர் மாதத்தில் நமக்கு தெரியாமல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா?.. தெரிஞ்சா அசந்துபோவீங்க.!

கொஞ்சம் வளர்ந்து கல்லூரி செல்லும் காலங்களில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக இன்று விடுமுறை வழங்க மாட்டார்களா? என எண்ணியிருப்போம்.

Template: Govt Holiday

டிசம்பர், 8: விடுமுறை (Holiday) என்பது நம்மிடையே பிடித்த விஷயங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். சிறுவர்களாக இருக்கும்போது பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்காதா? என ஏங்கியிருப்போம். கொஞ்சம் வளர்ந்து கல்லூரி செல்லும் காலங்களில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக இன்று விடுமுறை வழங்க மாட்டார்களா? என எண்ணியிருப்போம்.

அதன்பின், வேலைகளுக்கு சென்றதும் விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தமாகும் என்ற ஆரம்பகட்ட சூழலினை கடந்து, சம்பள பிடித்தம் இல்லாத நாட்களில் விடுமுறை இருக்காதா? என எண்ணியிருப்போம். இப்படியான நிலையில், டிசம்பர் மாதத்தில் என்றென்று விடுமுறை? விடப்படுகிறது என இன்று காணலாம்.

இம்மாதத்தில் தமிழகத்தை (Tamilnadu) பொறுத்த வரையில் மாநில அளவிலான விடுமுறை தினங்கள் என்பது எதுவும் இல்லை. டிசம்பர் 26ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை மட்டுமே சிறப்பிக்கப்படுகிறது. அன்று அகில இந்திய அளவில் விடுமுறை வழங்கப்படும். ஆனால், பிற மாநிலங்களில் இம்மாதத்தில் மாநில விடுமுறை என்பது உள்ளது. அதுகுறித்த தகவலை இனி காணலாம். India Tour: இந்தியாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவை இவைதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..! 

01 டிசம்பர் 2022 : நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் மாநில தொடக்க நாள் விடுமுறை வழங்கப்படுகிறது.

03 டிசம்பர் 2022 : உலக மாற்றுத் திறனாளிகள் தினம், St. பிரான்சிஸ் சேவியர் தினத்திற்கு திரிபுரா மற்றும் கோவா மாநிலங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது.

05 டிசம்பர் 2022 : ஷேக் முகமது அப்துல்லா ஜெயந்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பிக்கப்படுவதால் விடுமுறை வழங்கபடுகிறது..

12 டிசம்பர் 2022 : மேகாலயா மாநிலத்தில் பழங்குடியின தலைவர் Pa Togan Nengminza Sangama-வை கவுரவிக்க விடுமுறை வழங்கபடுகிறது.

18 டிசம்பர் 2022 : குரு காசிதாஸ் ஜெயந்தி மேகாலயா, சண்டிகர் மாநிலங்களில் கொண்டாடப்படுவதால் விடுமுறை வழங்கப்படுகிறது.

19 டிசம்பர் 2022 : கோவா மாநிலத்தில் கோவா விடுதலை நாள் விடுமுறை வழங்கபடுகிறது.

24 டிசம்பர் 2022 : மிசோரம், மேகாலயா மாநிலத்தில் கிறிஸ்து ஈவ் அரசு விடுமுறை வழங்கபடுகிறது.

25 டிசம்பர் 2022 : இந்திய அளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை அரசு விடுமுறை வழங்கபடுகிறது.

26 டிசம்பர் 2022 : ஷஹீத் உத்தம் சிங் ஜெயந்தி ஹரியானா மாநிலத்தில் சிறப்பிக்கப்படுவதால் அரசு விடுமுறை வழங்கபடுகிறது.

26 டிசம்பர் 2022 : மிசோரம், மேகாலயா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விடுமுறை வழங்கபடுகிறது.

30 டிசம்பர் 2022 : சிக்கிம், மேகாலயா மாநிலங்களில் தாமு லோசார் என்ற புதிய ஆண்டு பிறப்பை கொண்டாட விடுமுறை வழங்கபடுகிறது.

31 டிசம்பர் 2022 : மணிப்பூர் மாநிலத்தில் நியூ இயர் ஈவ் காரணமாக விடுமுறை வழங்கப்படுகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 04:51 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).