10 Investors Tips To Become Rich: நீங்கள் எளிதில் செல்வந்தர் ஆக வேண்டுமா?.. அசத்தலான 10 ஆலோசனைகள் இதோ..!
திரைப்படங்களில் நாம் பார்த்த செல்வந்தர்கள் எல்லாம் ஒரே பாடலில் உயர்த்திருப்பார்கள். ஆனால், நாம் அதனை எளிதில் எட்டிவிட முடியாது. விடா முயற்சி மட்டும் தான் மனிதனை உயரத்திற்கு அழைத்து செல்லும்.
மே 13, புதுடெல்லி (Business Tips): நடிகர் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தில் உள்ள பாடலில் எட்டு எட்டாக வாழ்க்கையை பிரிக்க சொல்லி பாடல் ஆசிரியர் எழுதியிருப்பார். அதேபோல, சரத் குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்சம் திரைப்படத்திலும் வாழ்க்கையில் கஷ்டப்படும் சரத்குமார்-தேவயானி ஜோடி ஒரே பாடலில் ஓஹோவென உயர்ந்து இருப்பார்கள். திரையில் உள்ள பல திரைப்படங்களில் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஒரே பாடலில் அமைந்துவிட்டது. அதனை கண்டு கனவுகாணும் பலரும் இன்றளவில் ஏங்கித்தவிக்கத்தான் செய்கின்றனர்.
வாழ்க்கையில் முன்னேற்றம், செல்வந்தர் ஆவது என்பது இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் வாழ்நாள் இலட்சியம் என்று கூறலாம். தினமும் எப்படியாவது நாம் செல்வந்தராகிவிட வேண்டும் என ஓடோடி உழைக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை கோடியாய் தாண்டும். அவர்களின் வாழ்நாள் உழைப்பு சிலருக்கு வெற்றியை தரும்; சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் உழைப்பாகவே இருக்கும். நாம் செல்வந்தராகவேண்டும் என்றால் அதற்கு பல கரணங்கள் நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பொருளாதார நிபுணர் சித்தார்த் மயூரியாவின் ஆலோசனைகள் குறித்து இன்று காணலாம். BJP Office Snake: பாஜக தலைமை அலுவலகத்தில் புகுந்த பாம்பு.. ரிசல்டுக்காக காத்திருந்த பாஜக தொண்டரகளை பதறவைத்த சம்பவம்..!
1. சந்தை முதலீடுகளில் கவனம்: நாம் செல்வந்தராக அல்லது அதற்கு முயற்சிப்பவராக இருக்கலாம். நம்மில் பலரும் சந்தையில் முதலீடு செய்வதை பெரும்பாலும் நினைத்திருப்போம். சந்தையை பொறுத்தமட்டில் உங்களுக்கு பரிபூரண அனுபவம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தயாராக களமிறங்கலாம். ஆனால், அவை உங்களின் சுய விருப்பத்தை பொறுத்தது. முயற்சி எடுக்க விரும்பும் நபர்கள் மட்டுமே பங்குச்சந்தை அல்லது ரியல் எஸ்டேட் தொடர்பான முதலீடுகளை நம்பலாம். பிறர் அதனை தவிர்ப்பதே நல்லது.
2. பல்வகைப்படுத்தப்பட்ட முதலீடுகள்: நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை அல்லது முதலீடுகளை நம்பத்தகுந்த நிலங்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றைன் மீது முதலீடுகள் செய்யலாம். இவற்றின் மதிப்பு உயரும் போது, அவை நமக்கு பக்கபலமாக உதவியை செய்யும்.
3. கையிருப்பில் உள்ள பணம்: நமது அவசர தேவைக்காக நாம் கையில் வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு செல்வந்தராக முயற்சிக்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் உள்ள சவாலான விஷயங்களில் முக்கியமான ஒன்றாகும். நமது முதலீடுகளுக்காக மட்டுமே அதிக பணத்தை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பிற பணத்தை முதலீடுகளில் தக்க வைப்பது சிறந்த முறையாகும். ஒவ்வொரு குடும்பம் தங்களின் மாத செலவுகளை கவனிக்க, மருத்துவ செலவுகளுக்கு உள்ள பணத்தை கையிருப்பில் வைத்திருப்பது நல்லது. ICSE Results 2023 On cisce.org: ICSE தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது; அதிகாரபூர்வ அறிவிப்பு..!
4. திரும்ப செலுத்தும் முதலீடுகள்: அனைத்து வகையுமான முதலீடுகள் அல்லாமல் சில குறிப்பிட்ட முதலீடுகளை மீண்டும் ஏற்படுத்தும் வகையில் அல்லது அதனால் நாம் பயனடையும் வகையில் முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும். அதிக வருமானம் அல்லது குறைந்த வருமானம், சில எதிர்பாராத ஏற்ற-இறக்கங்கள் இருந்தால் அதனை சமாளிக்கும் தன்மை போன்றவை பற்றி முன்னதாக சிந்தித்து செயல்பட வேண்டும். நமது வருமானத்தின் பங்கை பொது வருங்கால வைப்பு நிதி PPF (Public Provident Fund), வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்தல், மூத்த குடிமக்கள் வாய்ப்பு நிதி திட்டம் போன்றவற்றை தேர்வு செய்து உபயோகம் செய்துகொள்ள வேண்டும்.
5. EPF முதலீடுகள்: குடும்பத்தில் உள்ள நபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலை பார்த்து, வேலையை நிறைவு செய்யும் காலங்களில் நிறுவனத்தின் பங்காகவும் - நமது பங்காகவும் கிடைக்கும் தொழிலாளர் வைப்பு நிதி மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் நிறுவனம் ஆகும். இதில் நாம் முதலீடு செய்வது எவ்வித பிரச்னையும் இன்றி நாம் நமது பணத்தை பெற வழிவகை செய்யும். தற்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகமும் வழிவகை செய்கிறது. அதனை நாம் உபயோகம் செய்யலாம்.
6. உயிர் காப்பீடு திட்டங்கள்: நமது வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லாத நிலையில், நாம் இல்லாத சூழலிலும் நமது குடும்ப உறுப்பினர்களுக்கு நமது வருவாய் சென்றுசேர விரும்புவோர், அதற்கு உயிர் காப்பீடு திட்டங்கள் மூலமாக பயன்பெறலாம். அதனால் குடும்பம் எதிர்காலத்தில் நல்ல பலனை பெறும். MI Vs GT: வான்கடே மைதானத்தை அதிரவைத்த சூரியகுமார் யாதவ்.. நின்ற இடத்தில் 80 ரன்கள், 103 க்கு நோ அவுட்.!
7. சுய செலவுகளை திட்டமிடுதல்: நாம் அன்றாடம் நமது வாழ்க்கையில் எந்த விசயத்திரும் பணத்தை முக்கியமாக வைத்தே பயணித்து இருப்போம். அந்த வகையில், ஒரு நாளில் காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை எதற்காக? எவ்வுளவு? பணத்தை சேமிக்கிறோம், செலவழிக்கிறோம் என்பதை குறிப்பு வைத்து சரி செய்தால் நமது செலவுகள் நமக்கு புரியும். அதனை வைத்து நாமே செலவுகளை திட்டமிட்டுக்கொள்ளலாம். நமது எதிர்கால முதலீடுகளை பற்றியும் சிந்திக்கலாம்.
8. உங்களின் நிதி அடையாளம்: நிதிகள் இருக்கும் பலருக்கும் அதனை சரியாக பராமரிக்க தெரிவது இல்லை. ஆகையால், பணம் இருக்கும் நபர்களும் சரி, அதற்காக முயற்சிக்கும் நபர்களும் நமது பணத்தை எங்கு? எதில்? எப்போது? முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிய வேண்டும். அல்லது அதற்கான நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். Dowry Suicide: திருமணம் முடிந்த 5 ஆண்டுகளுக்குள் சோகம்; வரதட்சணை கேட்டு கொடுமை.. தூக்கில் தொங்கிய பெண்.!
9. தன்னம்பிக்கை: எந்த விதமான முயற்சியிலும் நமது தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதனை எப்போதும் நமது மனதுக்குள் நாம் எழுப்பிக்கொண்டு இருக்க வேண்டும். நமது செல்வந்தர் கனவு நமக்கானது என்பதால், அவற்றுக்கான முயற்சியை மேற்கொள்வது மட்டுமல்லாது, அதற்கான முயற்சிகள் பற்றிய தகவலையும் தெரிந்திருக்க வேண்டும். நாம் ஓரிடத்தில் செய்த முதலீடு வெற்றி அடைந்தால், அதற்கு நம்மை நாமே பாராட்டுவது வெற்றிக்கான அடித்தளம் ஆகும்.
10. பயம் வேண்டாம்: நிதி நிலைமை என்பது எப்போதும் நிலைத்து நிற்காதது. இன்று நம்மிடம் நமது உழைப்பால் இருப்பது, நாளை நமது உழைப்பு குறைந்தால் அவை குறையும். அதனை கண்டு எப்போதும் அச்சம் வேண்டாம். அதேபோல, குறைந்த முதலீடு அல்லது குறைந்த நாட்களில் அதிக பணம் போன்ற ஆசை விளம்பரங்களை நம்பி ஏமாற கூடாது. பண விஷயத்தில் நாம் கவனமாக இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)