Block Spam Call: எப்போதும் உங்களுக்கு Spam Call அழைப்புகளாக வருகிறதா?.. ஒரே நிமிடத்தில் அதனை தடுப்பது எப்படி?..!

அதனை யாரோ என்று எடுத்தால் ஸ்பேம் கால் வந்து விளம்பரங்களை கூறி எரிச்சலூட்டும்.

Respective: Spam Calls Alert

டிசம்பர், 11: நாம் அவசர வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது திடீரென அழைப்பு ஒன்று வரும். அதனை யாரோ என்று எடுத்தால் ஸ்பேம் கால் (Spam Call) வந்து விளம்பரங்களை கூறி எரிச்சலூட்டும். இதனால் நமது வேலையும் தடைபட்டு நிற்கும். இனி நமது போனில் ஸ்பேம் கால்களை எப்படி தவிர்ப்பது என காணலாம். இது இன்றளவிலும் பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது.

நமக்கு தேவை இல்லாமல் வரும் டெலிமார்க்கெடிங் & ஸ்பேம் அழைப்புகளை (Telemarketing & Spam Calls) எப்போதும் திருப்பி அழைக்காத வண்ணம் பிளாக் செய்திடலாம். இந்த செயல்முறையை ஆக்டிவேட் செய்துவிட்டால், நமக்கு தேவையில்லாத அழைப்புகள் என்பது ஒட்டுமொத்தமாக துண்டிக்கப்படும். FactsOfMGR: அடடே.. திமுக துரைமுருகன், கோவை சரளாவுக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர்… பலரும் அறியாத உண்மைகள்.! 

நாம் எந்த நெட்ஒர்க் உபயோகம் செய்தாலும், ஸ்பேம் கால்களில் மோசடி என்பது நிறைந்துள்ளது. ஒரு நாளுக்கு ஸ்பேம் கால்கள் ஒரு நபருக்கு 10 பெறப்படும் பட்சத்தில், அதில் 1 முதல் 3 வரை உண்மையான அழைப்பாக இருக்கும். மீதமுள்ள அழைப்புகள் அனைத்தும் பயனர்களை சிக்கவைக்கும் ஸ்பேம் கால்களே.

ஸ்பேம் எண்களை தேடி தடுப்பது என்பது சாத்தியம் இல்லாதது என்ற காரணத்தால், ஸ்பேம் கால் கில்லர் என்ற அமைப்பே நமக்கு அதில் இருந்து விடுதலை தரும். நமது மொபைலில் Do Not Disturb என்பதை SMS வாயிலாக ஸ்டார்ட் என 1909 நம்பருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன்பின், ஸ்பேம் கால்களில் உள்ள வகைகளை அது பட்டியலிடும்

நமக்கு தேவையில்லாத பட்டியலை தேர்வு செய்து ரிப்ளை செய்தால், 24 மணிநேரத்திற்குள் ஸ்பேம் கால்கள் முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறாக நாம் செய்யும் DND (Do Not Distrub) முறை நமது நார்மல் SMS சேவைகளை பாதிக்காது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 07:18 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif