PF Withdrawal: உங்களின் PF பணத்தை 5 நிமிடத்தில் வங்கிக்கு பரிமாற்றம் செய்வது எப்படி?.. இன்றே Apply செய்யுங்கள்.!
இந்த செயல்பாடுகளை மத்திய அரசின் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வருகிறது.
டிசம்பர், 7: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund Organisation) அமைப்பு மூலமாக ஊழியர்களின் வருங்கால நிதி வரவு வைக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளை மத்திய அரசின் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் எதிர்கால நிதியை சம்பளத்தில் குறிப்பிட்ட விழுக்காடு பிடித்து வரவு வைத்து பிற்காலத்தில் எடுத்து உபயோகம் செய்துகொள்ளும் வகையில் நிர்வகிக்கப்படும்.
மத்திய அரசின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். பின், அதனுள் குறிப்பிடப்பட்டுள்ள UAN Login பக்கத்தில் தங்களின் விபரங்களை தெரிவித்து உள்நுழைய வேண்டும். தற்போது PF தொடர்பான விபரங்கள் அனைத்தும் ஆன்லைன்க்கு கொண்டு வரப்பட்டுவிட்டதால், அதில் உள்ள விபரங்களை சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே பணம் பெறப்படும்.
தெளிவான தகவல் அவசியம்: ஆதாரை இணைக்காதவர்கள், வங்கி விபரத்தை சரியாக பதிவு செய்யாதவர்கள் அதற்கான திருத்தங்களை முதலில் செய்துகொள்ள வேண்டும். நமது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு, நமது PF பணத்தை எடுக்கலாம். இதில், பணத்தை பகுதியளவு எடுக்கவும், முழு பணம் எடுக்கவும் இயலும். ஆனால், அதற்கான நிபந்தனைகள் மட்டும் மாறுபடும். குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரத்தை கடந்து பணம் எடுக்க முயற்சிக்கும் போது PAN கார்டும் கட்டாயமாக்கப்படும். Health Tips: கணினி முன்பு தினமும் வேலை செய்பவரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
பான் கட்டாயம்: இதில், ரூ.15 ஆயிரம் வரை பணம் எடுக்கும் போது வருமான வரிப்பிடித்தம் செய்யப்படமாட்டாது. ரூ.50 ஆயிரத்தை கடந்து பணம் எடுக்கும் பட்சத்தில் வருமான வரிப்பிடித்தம் செய்ய PAN கட்டாயமாக்கப்படும். ஆகையால், PAN மற்றும் ஆதார் விபரங்களை முதலில் இணைத்துவிட்டு பணத்தை எடுக்க முயற்சிக்கலாம். ஏனெனில், இம்மாற்றத்தை அதிகாரிகள் உறுதி செய்ய குறைந்தபட்சம் 7 நாட்கள் ஆகலாம்.
பெயர்களில் கவனம் தேவை: நமது பணத்தை மொத்தமாக எடுக்க முயற்சிக்கும் போது, அதற்கான தகுந்த காரணத்தை தெரிவித்து வங்கிக்கணக்கு, பேன் கார்ட், ஆதார் கார்ட், UAN பதிவில் உள்ள பெயர் போன்றவை ஒருசேர இருக்க வேண்டும். ஒரு எழுத்து மாறினால் கூட பணம் பெற இயலாது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.
முழு பணத்தை நாம் பெற விருப்பப்படும் போது ஆன்லைனில் 15G படிவத்தை இணையத்தில் பதிவேற்றி, அதனை நகலாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பின், படிவம் 19, 15G, 10C, பேன் கார்ட் போன்றவற்றை PF அலுவலகத்தில் வழங்கியும் வருமான வரிப்பிடித்தம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
Note: வங்கிக்கணக்கு, ஆதார் - பேன் விபரங்கள், அதில் உள்ள பெயர் தொடர்பான விபரங்கள் போன்றவை ஆவணங்களின்படி சரியாக இருக்க வேண்டும். அவை சரியாக இருந்தால் மட்டுமே பணம் நமக்கு கிடைக்கும். இல்லையேல் கட்டாயம் மாற்றம் செய்த பின்னர் பணத்தை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல, வங்கி காசோலை இல்லாதவர்கள். வங்கியின் கணக்கு புத்தகத்தை பதிவேற்றம் செய்தால் அந்தந்த விபரங்களுக்கு எதிரில் தகுந்த விபரங்கள் இருக்கிறதா? என்பதை சோதனை செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். வங்கிபுத்தகத்தில் பெயர் உள்ள இடத்தில் வேறொரு விபரம் என மாறிமாறி இருந்தாலும் பணம் வரவு வைக்கப்படாது.