Human Finger In Ice Cream: ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்..!
மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது தொடர்பாக, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 13, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மலாடில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் (வயது 26). இவர், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர் ஆவார். நேற்றைய தினம் (ஜூன் 12) இவருடைய சகோதரி ஆன்லைனில் யம்மோ (Yummo) நிறுவனத்தின் பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் கோனை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீம் (Ice Cream) சாப்பிட்ட அவருக்கு, தனது நாக்கில் ஏதோ தென்பட்டதை உணர்ந்தார். அவர் அதனை கூர்ந்து கவனித்தபோது, அதற்குள் ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட விரல் இருப்பதைக் கண்டார். Husband And Wife Suicide: குடும்ப தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை; குழந்தைகள் பரிதவிப்பு..!
இதுகுறித்து, அந்த ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் அளித்தார். இதற்கு அந்த நிறுவனத்திடம் இருந்து பதில் வராததால், இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் மேற்கொண்ட விசாரணையில், ஐஸ்கிரீமில் மனித விரல் இருக்கிறது எனக் கூறியுள்ளனர். மேலும், இதனை தடயவியல் விசாரணைக்கு விரலை அனுப்பியுள்ளனர். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)