நவம்பர் 06 , கெலமங்கலம் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், கூத்தனப்பள்ளி பகுதியில் டாடா நிறுவனத்துக்கு சொந்தமான மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 25,000 பேர் 3 ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். வெளிமாநில, வெளியூர் பெண்கள் தங்க வசதியாக நாகமங்கலம் பகுதியில் விடியல் ரெசிடன்சி கட்டப்பட்டு இருக்கிறது. இந்த விடுதியில் ஒரு அறைக்கு 4 பேர் வீதம் பெண்கள் மட்டும் தங்கியிருக்கின்றனர்.
பெண்கள் அறையில் ரகசிய கேமிரா:
இதனிடையே, விடியல் ரெசிடன்சியின் 4 வது பிளாக் குடியிருப்பின் 8வது மாடியில் அறை எண் 808 உள்ளது. இந்த அறையில் வடமாநில பெண்கள் தங்கி இருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா மாநில பெண் அனாமிகா கழிவறையில் ரகசிய கேமிரா இருப்பதை கண்டறிந்துள்ளார். தொடர்ந்து, ரூமில் இருந்த ஒடிசா பெண் நீரு குமாரி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பதறியபடி வந்த பெண்மணி, கேமிராவை பிடுங்கி வெளியே போட்டுள்ளார். மேலும், அறையில் வேறு எங்காவது கேமிரா இருக்கிறதா? என சோதித்தபோது, கட்டிலுக்கு கீழே கேமிரா டிவைஸ் இருப்பது தெரியவந்தது. Madhampatty Rangaraj: DNA டெஸ்ட் எடுங்க.. ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை என்னுடையதல்ல - சந்தேக அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.!
குற்றத்தை மறைக்க முயற்சி:
உடனடியாக இதுகுறித்து கேமிராவுடன் விடுதி காப்பாளர் சரிதாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெயரளவுக்கு விசாரணை நடத்துவதாக கூறிய சரிதாவின் விசாரணையின்போதே, நீரு குமாரியிடம் அவரது ஆண் நண்பர் கேமிராவை கொடுத்து வைக்கச் சொன்னது தெரியவந்தது. பெங்களூரைச் சேர்ந்த காதலர் சந்தோஷ் கொடுத்த அறிவுரையின் பேரில், நீரு குமாரி இந்த செயலை அரங்கேற்றி இருக்கிறார். இதனையடுத்து, இந்த விஷயத்தை மூடி மறைக்க நினைத்த விடுதி காப்பாளர் சவிதா, தான் பார்த்துக்கொள்வதாக அனைவரையும் அனுப்பி வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி காவல்துறை அதிரடி:
பின் எந்த நடவடிக்கையும் 2 நாட்களாக இல்லாத நிலையில், நேற்று இதுதொடர்பான தகவல் அனைத்தும் பெண்கள் இருந்த வாட்சப் குழுவில் பரவியுள்ளது. இதனால் 2,000 க்கும் அதிகமான பெண்கள் விடுதி வளாகம் முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வார்டன் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக குரல்கள் முன்வைக்கப்பட்டன. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பேச்சுவார்த்தை நடத்தி, கேமிரா வைத்த பெண்ணான நீரு குமாரியை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் காதலருக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.