Central Govt Schemes: நரேந்திர மோடி அரசின் 5 முக்கிய சாதனைகள் என்னென்ன?..!
நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கிறது. அவற்றில் முக்கியமான 5 திட்டங்கள் மற்றும் அதன் சாதனைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
டிசம்பர் 7, டெல்லி: கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிமுகம் கண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பணியாற்றி வருகிறார். நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கிறது. அவற்றில் முக்கியமான 5 திட்டங்கள் மற்றும் அதன் சாதனைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
- கொரோனா தடுப்பூசி திட்டம் (Corona Vaccination Scheme): உலகளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய கொரோனாவை யாராலும் மறக்க முடியாது. அன்றாடம் தினக்கூலியாக பணியாற்றியவர்களில் இருந்து பெரு நிறுவனங்களில் பணியாற்றுவோர் வரை பலரையும் பாதித்த விஷயங்களில் இது முக்கியமான ஒன்று. இந்தியா இதனால் மேலும் திண்டாடிய சமயத்தில், இந்தியாவிலேயே கொரோனா நோய்க்கு தடுப்பூசியும் கண்டறியப்பட்டது. அதனை மக்களுக்கு இலவசமாக சென்றுசேர்க்க அரசு அறிவித்த இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் பேருதவி செய்தது.
- வந்தே பாரத் இரயில் திட்டம் (Vandhe Bharat): இரயில்வே துறையினை மேம்படுத்தும் பொருட்டும், இரயில் பயணங்களை எளிதாக்கும் வகையிலும், மக்களுக்கு விரைவு இரயில் சேவையை வழங்குவதை உறுதி செய்யவும் மினி புல்லட் இரயில் திட்டமாக அறிவிக்கப்பட்டது வந்தே பாரத் இரயில் திட்டம். இந்த சேவை மூலமாக தற்போது பல நகரங்களை இணைக்கும் வகையில் இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளன.
- டிஜிட்டல் இந்தியா & மேக் இன் இந்தியா (Digital India & Make In India): மத்திய அரசு அறிவித்தத்தில் உலகளவில் கவனிக்கப்பட்டது டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டம். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கி மக்களின் சேவைகளை எளிதில் வழங்கவும், அதனை உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களாக வழங்கவும், அதனை ஊக்குவிக்கவும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் பல தொழில்நுட்ப மேம்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. UN Security Council: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சி; ஏகமானதோடு ஆதரவு கூறிய ரஷியா.!
- பிரதமர் விவசாயிகள் திட்டம் (PM Kisan Scheme): இந்தியாவில் இருக்கும் விவசாயிகள் அனைவரும் பலன்பெறும் வகையில், அவர்களை தொடர்ந்து விவசாயம் செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது பிரதமர் விவசாயிகள் திட்டம். இத்திட்டம் மூலமாக ஆண்டுக்கு 14 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
- உஜ்வாலா, ஜன் தன் மற்றும் ஆயுஷ்மான் பாரத் (Ujjwala, Jan dhan, Ayushman Bharath Schemes) : கடந்த 2016 மே மாதம் பெண்களின் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட்டது உஜ்வாலா யோஜனா திட்டம். இதன்மூலமாக 5 கோடி கேஸ் இணைப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. பல பெண்கள் அடுப்புக்கரியில் இருந்து விடுதலை அடைந்தனர். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கு என்ற முறையில் தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தினால் 45 கோடி பயனர்கள் புதிதாக வங்கிக்கணக்கை தொடங்கி பயன்பெற்றனர். இவர்களின் வங்கிக்கணக்கில் மொத்தமாக ரூ.1 இலட்சத்து 67 ஆயிரம் கோடி நிதி செலுத்தப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்க ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக ஏழை-எளிய மக்கள் பலரும் தங்களுக்கான சிகிச்சையை மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக்கொள்கின்றனர்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 07:39 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)