Andhra Shocker: பாலியல் தொல்லையால் டிப்ளமோ கல்லூரி மாணவி தற்கொலை; கல்லூரி பேராசிரியர்களின் காம களியாட்டம்?.. அதிரவைக்கும் பயங்கரம்.!

விடுதியில் தங்கியிருந்து டிப்ளமோ பயின்று வந்த மாணவி, பேராசிரியர்கள் அளித்த பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Camera | Suicide File Pics (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில், சைதன்யா பொறியியல் (Chaitanya Engineering College) கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் பலரும், அடுத்தடுத்து கல்லூரி வளாகத்தில் மர்மமான முறையில் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் சோகம் நடந்து வந்தது.

கல்லூரி மாணவி (College Girl Suicide) தற்கொலை: இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி பேராசிரியர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி, மாணவி தனது வாட்ஸ் அப்பில் தந்தை மற்றும் சகோதரருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னைப் போல பல மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் தங்களின் படங்கள் ஆபாசமாக சமூகத்தில் பரப்பப்படும் என்றும் பேராசிரியர்கள் அச்சுறுத்தியதாகவும் கடிதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. Israel Hamas War: இஸ்ரேலின் தாக்குதலில் ஐநா தொண்டு பணியாளர்கள் ஐவர் பலி; இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அதிர்ச்சி சம்பவம்..! 

பாலியல் தொல்லையால் பகீர்: இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்துகையில், பாதிக்கப்பட்ட மாணவி டிப்ளமோ பயின்று வந்துள்ளார். அவர் வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் போக்ஸோ மற்றும் ராகிங் தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவல்துறையினர் விசாரணை: சிறுமியின் சகோதரர் தனது தங்கையின் மரணம் குறித்து கூறுகையில், "எனது தங்கையின் உடலில் காயம், ரத்தக்குறிகள் இல்லை. விடுதியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எனது தங்கை எங்களுக்கு அளித்த தகவலின்படி, பாலியல் துன்புறுத்தலால் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் மரணத்திற்கு நியாயம் வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் கூறியிருக்கிறார்