School Van Accident: பள்ளி வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து.. 6 மாணவர்கள் பரிதாப பலி., ஓட்டுனரின் அலட்சியம், அதிவேகத்தில் நேர்ந்த சோகம்.!

தறிகெட்ட வேகத்தில் வாகனத்தை இயக்கிய ஓட்டுனரின் அலட்சிய செயலால், 6 மாணவர்களின் உயிர் பறிபோயுள்ள சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

School Van Crash in Haryana (Photo Credit: @PTI_India X)

ஏப்ரல் 11, நார்நாவுல் (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள நார்நாவுல் மாவட்டம், மகேந்திரகர்க், கணினா கிராமத்தில் இன்று 40 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றுக்கொண்ட பேருந்து ஒன்று சாலையில் பயணம் செய்தது. பேருந்து கணினா கிராமத்தை கடந்து சென்றபோது, முன்னாள் சென்ற (Haryana School Van Accident Students Died) வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம், சாலையில் தறிகெட்டு இயங்கி மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 6 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்து அலறியுள்ளனர். Viral Video: திடீரென வீட்டிற்குள் புகுந்த தேனீக்கள்… விரட்டியடித்த மாமனிதர்..! 

அதிவேக பயணத்தால் அப்பாவி உயிர்கள் பரிதாப பலி: பள்ளி வாகனம் விபத்திற்குள்ளானதை கண்டு அதிர்ந்துபோன உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அவசர ஊர்தி உதவியுடன் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, வேன் ஓட்டுநர் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதுதான் விபத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

விபத்து ஏற்பட்டதும் எடுக்கப்பட்ட வீடியோ: