Cracks in Land: நிலங்களில் ஏற்படும் திடீர் விரிசல்; காரணம் என்ன?.. விழிபிதுங்கும் கிராம மக்கள்.!
கடந்த ஆண்டில் வீடுகள் மண்ணில் புதையும் பிரச்சனையை எதிர்கொண்ட லாஹூல் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில், திடீரென வெடிப்புகள் ஏற்படுவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஜூலை 08, லாஹூல் ஸ்பிட்டி (Himachal Pradesh News): இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள லாஹூல் ஸ்பிட்டி மாவட்டம், லிங்கூர் கிராமத்தில் சமீபமாகவே விவசாய நிலங்களில் திடீரென பெரிய அளவிலான பிளவுகள் தென்பட்டு இருக்கின்றன. இந்த விஷயம் குறித்து தற்போது கிராம மக்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதலில் பயன்பாடு இல்லாத தனியார் நிலங்களில் தென்பட்ட விரிசல், படிப்படியாக விவசாய நிலங்களிலும் தென்பட்டு இருக்கின்றன. இதனால் கிராம மக்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் இந்நிகழ்வு குறித்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். IND Vs ZIM Highlights: அடித்து நொறுக்கிய இந்திய அணி; 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஜிம்பாவே..!
வீடுகள் புதைவை தொடர்ந்து, அடுத்த அதிர்ச்சி சம்பவம்:
அங்குள்ள நிலங்கள் அனைத்தும் பிளவுபட்டு, வெடிப்புடன் ஆங்காங்கே காணப்படுகிறது. இவை எப்படி ஏற்பட்டது? எதனால் ஏற்பட்டது? என உள்ளூர் மக்களுக்கு தெரியவில்லை. அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே நிலங்களில் ஏற்பட்ட விரிசலுக்கான காரணம் தெரிய வரும். முன்னதாக கடந்த ஆண்டில் இதே மாவட்டத்தில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, நிலங்கள் திடீரென புதைந்த சம்பவம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.