Truck Rammed into Wedding Procession: திருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி.. 6 பேர் பரிதாப பலி., 10 பேர் படுகாயம்.!

இந்த சோக சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.

MP Raisen Accident (Photo Credit: @ANI X)

மார்ச் 12, ரைஸன் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரைஸன் மாவட்டம் (Raisen Accident), காமரியாவில், டிரக் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்து சென்றுகொண்டிருந்த குழுவினர் மீது புகுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நொடியில் 6 பேர் பலி., 12 பேர் படுகாயம்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 க்கும் அதிகமானோர் காயமடைந்து உயிருக்கு போராடினர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். உயிரிழந்தோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. Haiti PM Resign: எதிர்ப்பு குழுவின் மிரட்டல், அரசியல் குழப்பம் எதிரொலி: ஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா..! 

ஆறுதல் கூறிய ஆட்சியர்: விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றதால், காவல் துறையினர் ஓட்டுநருக்கு வலைவீசி இருக்கின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்து ரைஸன் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு விரைந்த அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் துபே, காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்தார். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

தலைமறைவான லாரி ஓட்டுநருக்கு வலைவீச்சு: அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விபத்தில் சிக்கிய குடும்பத்தினரிடம் விசாரிக்கப்பட்டு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. போபால் எய்ம்ஸ் மருத்துவமனைகு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லாரி ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசம் வந்ததாக தெரியவருகிறது. ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது" என கூறினார்.