Air India Flight Collision: டிராக்டருடன் மோதிய ஏர் இந்திய விமானம்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 180 பயணிகள்.!

நல்வாய்ப்பாக பெரிய அளவிலான விபத்து ஏற்படாத காரணத்தால், பெரும் விபத்து புனேவில் தவிர்க்கப்ட்டுள்ளது.

Air India (Photo Credit: Wikipedia Commons).jpeg

மே 17, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே விமான நிலையத்தில் இருந்து, டெல்லி நோக்கி பயணிக்க ஏர் இந்திய விமானம் ஒன்று தயாராக இருந்தது. விமானத்தில் விமான குழுவினர், பயணிகள் உட்பட 180 பேர் இருந்தனர். விமானம் பயணத்திற்கு தயாராகி ஊடுபோதையை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அச்சமயம் விமானத்தின் மூக்குப்பகுதி, விமானத்தை இழுக்கும் டிராக்டருடன் மோதி விபத்தில் சிக்கியது. Wife Swapping Case: மனைவியை மாற்றத் துடிக்கும் கணவன்; உறங்கும்போது அந்தரங்க போட்டோ எடுத்து பகிரங்க மிரட்டல்.! 

நல்வாய்ப்பாக பெரும் சேதம் இல்லை: இதனால் விமானம் அங்கேயே நிறுத்தப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக பயணிகள் மற்றும் விமான குழுவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர். விமானத்தின் பழுதை தொடர்ந்து, பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் டெல்லி அழைத்து செல்லப்படவுள்ளனர். இதனால் அவசரமாக டெல்லி செல்லவேண்டிய பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.