IPL Auction 2025 Live

Snake Smuggling: பிஸ்கட், கேக் பெட்டிகளில் அடைத்து கொண்டு வரப்பட்ட பாம்புகள்; விமான நிலையத்தில் நடுநடுங்கிப்போன அதிகாரிகள்.!

உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பாம்புகள் கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டது அம்பலமானது.

Snake Smuggling Flight (Photo Credit: @ANI X)

டிசம்பர் 23, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச (Chhatrapati Shivaji Maharaj International Airport) விமான நிலையத்தில் வரும் பயணி, வெளிநாட்டில் இருந்து விமான வழியே பாம்பு கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது.

உளவுத்துறை தகவலின் பேரில் அதிரடி சோதனை: இதனையடுத்து, மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, சோதனைகளை தீவிரப்படுத்தினர். அப்போது, பேங்காக்கில் இருந்து பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர். Vaikunta Ekadasi: விண்ணைப்பிளந்த ரங்கா., ரங்கா கோஷம்: ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்.! 

பால் மலைப்பாம்புகள் கடத்தல்: அப்போது, பயணி பிஸ்கட் மற்றும் கேக் பார்சலுக்குள் பாம்பு கடத்தி வந்தது உறுதியானது. இந்த சோதனையில் மொத்தமாக 9 மலைப்பாம்புகள் (Python Regius) மற்றும் 2 சோளப் பாம்புகள் (Pantherophis Guttatus) கண்டுபிடிக்கப்பட்டன.

தொடரும் விசாரணை: பாம்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரன்னை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக பாம்பை கடத்தி கொண்டு வந்தார்? இதற்கு பின்னனியில் உள்ள கும்பல் யார்? என விசாரணை தொடருகிறது.