அக்டோபர் 01, சென்னை விமான நிலையம் (Chennai Airport): போதைப் பொருள் கடத்தல் வழக்கு என்பது தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. போதைப்பொருள் இந்தியாவில் புலங்குவதையும், அதன் வருகை மற்றும் உற்பத்தி போன்றவற்றை கட்டுப்படுத்துவதிலும் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதனிடையே, பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகரான விஷால் பிரம்மா(Bollwyood Actor Vishal Brahma Arrested), நேற்று (செப். 30) சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 3.5 கோடி மதிப்புள்ள மூன்று கிலோ அளவிலான கொக்கையினை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Gold Rate Today: ரூ.87,000ஐ நெருங்குகிறது தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி.. கிடுகிடு உயர்வு.!
போதைப்பொருள் கடத்தல் - பாலிவுட் நடிகர் கைது (Drug Smuggling Case Chennai):
சென்னை விமான நிலைய (Chennai Airport) வான் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், ஞாயிற்றுக்கிழமை காலையில் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் பிரம்மாவிடம் (Vishal Brahma) விமான நிலையத்தில் சோதனை நடைபெற்றது. இந்த நடிகர் கரன்ஜோகரின் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். சோதனையின்போது, அவரது லக்கேஜில் போலீ எண்ணெய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில் பிளாஸ்டிக் பாக்கெட்டில் பவுடர் போன்ற ஒன்று மறைத்து வைத்து கடத்தப்பட்டது தெரியவந்தது. ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் அது போதைப்பொருள் என்பது உறுதியானது.
விஷால் பிரம்மாவிடம் தொடரும் விசாரணை:
கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வழியே சென்னைக்கு பயணம் செய்த நடிகரிடம், அடையாளம் தெரியாத நபர்கள் கொடுத்த ட்ராலி பெட்டியை சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க கூறியதாகவும், தனக்கும் கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என நடிகர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாலிவுட் நடிகர் விஷால் பிரம்மா மூலமாக மும்பை அல்லது டெல்லிக்கு போதைப்பொருள் கடத்தும் நபர்களிடம் ஒப்படைக்க இந்த பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. நடிகர் கூறுவது உண்மையா? அல்லது குருவி போல கடத்தல் செயலில் அவர் ஈடுபட்டாரா? எனவும் விசாரணை நடைபெறுகிறது.