2 தோழிகளுடன் சேர்ந்து மனைவி கொடூர கொலை; மருந்தை ஓவர்டோஸாக கொடுத்து கள்ளகாதலுக்காக விபரீதம்., கம்பி எண்ணும் சோகம்.!
திருமணமாகி மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்த கணவன், இறுதியில் கள்ளக்காதல் வயப்பட்டு சொந்த மனைவிக்கு அளவுக்கு அதிக மயக்க மருந்து கொடுத்து மரணத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
அக்டோபர் 31, புவனேஸ்வர் (Odisha News): ஒடிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஸ்ரீ. இவரின் கணவர் பிரதிமான் (வயது 24). தம்பதிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் தற்போது வரை குழந்தை இல்லை. பிரதிமான் மருந்தாளுநராக வேலை பார்த்து வருகிறார். திருமணமானதில் இருந்து பிரதிமான் - சுபஸ்ரீ இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதல் பழக்கம்:
இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டில் பிரநிதிமானுக்கு ரோஸி பத்ரா என்ற பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் கடந்த உறவில் நெருங்கி பழகி இருக்கின்றனர். பின் பிரதிமானுக்கு எஜிதா புயான் என்ற பெண்ணுடனும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதல் ஜோடிகள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. சுபஸ்ரீக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. Sexual Harassment: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அதிமுக பிரமுகர் போக்ஸோவில் கைது.!
அதிக மயக்க மருந்து:
இதனால் அவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதிமான் மனைவியை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறியுள்ளார். அங்கிருந்து புறப்பட்டு ரோசியின் வீட்டிற்கு மனைவியை அழைத்துச் சென்றவர், அவருக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்தை ஊசியில் (Overdose of Anesthesia) செலுத்தியுள்ளார். இதனால் அவர் மயங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மூவரும் கைது:
இந்த விசயத்திற்கு பிராதிமானுக்கு உறுதுணையாக அவரின் தோழிகள் இருவரும் செயல்பட்டுள்ளனர். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரில் நடந்த விசாரணையில், பிரதிமான் உண்மையை அம்பலப்படுத்தவே காவல்துறையினர் மூவரும் கைது செய்தனர்.