Mother Killed by Son: பணம் தர மறுத்த தாயை மானபங்கப்படுத்தி, கொலை செய்த கொடூர மகன்: நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
அம்மாவின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்து பணம் தர மறுத்த தாயை மகன் கொலை செய்த துயரம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.
ஜனவரி 08, ரங்காரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், ஷாத் நகர், கேஷம்பேட் சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் சுகுனம்மா. இவரின் மகன் சிவகுமார். சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்று முடிந்து மனைவி இருக்கிறார். தம்பதிகள் தனியே வசித்து வருகிறார்கள். சுகுனம்மாவின் பெயரில் உள்ள வீட்டினை, தனது பெயருக்கு மாற்றி தருமாறும், இல்லையேல் வீட்டை விற்பனை செய்ய வேண்டும் என்றும் தாயை சிவகுமார் வற்புறுத்தி வந்ததாக தெரியவருகிறது.
அன்னையென்று பார்க்காமல் பணத்துக்காக பயங்கரம்: இதற்கு சுகுனம்மா மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் தாய் - மகன் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று தனது தாயின் வீட்டிற்கு சென்ற மகன், அம்மாவை கடுமையாக அடித்து துன்புறுத்தி இருக்கிறார். அவரின் ஆடைகளை களைந்து பெற்றெடுத்த தாய் என்றும் பாராது மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.
மரணத்தை உறுதி செய்த அதிகாரிகள்: இந்நிலையில், மறுநாள் காலையில் சுகுன்னமாவின் வீட்டில் நடமாட்டம் இல்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்ற பார்த்தபோது, அவர் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். இதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் விரைந்து வந்து சுகுனம்மாவை சோதனை செய்தபோது உயிர் பறிபோனது தெரியவந்தது. Central Minister Piyush Goyal Tribute Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற மரியாதை செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.!
விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்: அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுகுனம்மாவுக்கும் - அவரது மகன் சிவகுமார் இடையே நடந்த தகராறு தெரியவந்துள்ளது. சண்டையை அக்கம் பக்கத்தினர் விலக்கி சென்ற பின்னரும், ஆத்திரம் குறையாத சிவகுமார் தாயின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்தது அம்பலமானது.
பதறவைக்கும் காணொளி வெளியானது: தாயின் மறைவை அறிந்து முதலில் நல்லவன் போல சிவகுமார் உறவினர்கள் மத்தியில் நடித்திருந்துள்ளார். அதிகாரிகளின் விசாரணையில் உண்மை அம்பலமானதை தொடர்ந்து, சிவகுமாரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிவகுமார் தனது தாயை மானபங்கப்படுத்தி தாக்கும் காணொளி வெளியாகி இருக்கிறது.