Central Minister Piyush Goyal Tribute Vijayakanth (Photo Credit: @ANI X)

ஜனவரி 08, சென்னை (Chennai): தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர், மூத்த தமிழ் நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி காலை 08:30 மணிக்குமேல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர உடல்நல பாதிப்புடன் இருந்து வந்த விஜயகாந்த் (Vijayakanth), தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

மறைந்துபோன கருப்பு எம்.ஜி.ஆர்: அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, தனது கட்சித்தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை பார்ப்பது என இருந்தார். டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சில நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு திரும்பினார். இரண்டு வாரம் கடந்த பின்னர், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. Pet Missing: மாயமான பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.1 இலட்சம் பரிசு: பூனையின் மீதான பாசத்தால் உரிமையாளர் நெகிழ்ச்சி செயல்.! 

ஒட்டுமொத்த தமிழகமே சோகம்: விஜயகாந்தின் மறைவு தமிழ் திரையுலகை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் நேரில் தங்களது அஞ்சலியை பதிவு செய்திருந்தனர். திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றதையொட்டி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் (Central Minister Piyush Goyal) நேற்று மாநாட்டிற்கு வருகை தந்து உரையாற்றினார்.

விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர்: இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று, அவரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர், தனது அஞ்சலியை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது தேமுதிக பொதுச் செயலாளர் மற்றும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.