Minor Girl Beaten by Stray Dogs: வீட்டு வாசலில் இருந்த சிறுமியை தாக்கிய தெரு நாய்கள்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

பெற்றோர் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

UP Amroha Dog Bite (Photo Credit: @MirrorNow X)

மார்ச் 10, அம்ரோஹா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா பகுதியில், கடந்த சனிக்கிழமை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த பச்சிளம் சிறுமியை தெரு நாய்கள் குழுவாக சேர்ந்து கடித்து குதறியது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். A Baby Elephant: தாயை பிரிந்த குட்டி யானை – முதுமலை காப்பகத்தில் பராமரிப்பு..! 

அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்தது: சிறுமி தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி வீட்டிலின் வாசலில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்ரோஹா, சிட்டி நகர் கோட்வாலி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்துள்ளது. இதுகுறித்து மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்து, நாய்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், எந்த பலனும் இல்லை. இறுதியில் சிறுமி பாதிக்கப்பட்டு இருக்கிறார்.