Snake Bites Young Man on 7th Time: 40 நாட்களில் 7 முறை கடித்த பாம்பு; விடாது கருப்பாக துரத்தித்துரத்தி தாக்குதல்.. ஊசலாடும் உயிர்.!

இந்த சம்பவத்தால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Calender Snake File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 12, பாடெக்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாடெக்பூர் மாவட்டம், சாகா பகுதியை சேர்ந்தவர் விகாஸ் துபே. இவரை கடந்த 40 நாட்களுக்கு முன், ஜூன் 02ம் தேதி உறக்கத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று தீண்டி இருக்கிறது. இதனையடுத்து, குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவமனையில் பூரண உடல்நலம் தேறிய இளைஞர், பின் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

7 முறையாக அடுத்தடுத்து தீண்டிய பாம்பு:

இதனிடையே, வீட்டிற்கு வந்த விகாஷை, இரண்டாவது முறையாக ஜூன் 10 அன்று மீண்டும் தீண்டி இருக்கிறது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இருக்கிறார். வீடு திரும்பிய 7 நாட்களுக்கு பின், ஜூன் 17 அன்று பாம்பு மீண்டும் விகாஷை தேடி தாக்கி இருக்கிறது. இவ்வரக்க கடந்த 40 நாட்களில் மட்டும் மொத்தமாக அவரை 7 முறை பாம்பு தீண்டி இருக்கிறது. Youth Killed in Land Dispute: நிலத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக்கொன்ற பயங்கரம்; அண்ணன்-தம்பி குடும்பத்தில் துயரம்.! 

ஐசியுவில் அனுமதி:

இறுதியாக ஜூலை 11ம் தேதியான நேற்று விகாஷ் பாம்பால் ஏழாவது முறையாக தீண்டப்பட்ட நிலையில், உடல் மிகவும் மோசமடைந்து ஐசியு வார்டில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பதால், உறவினர்கள் அவர் உயிர்பிழைத்து வருவாரா? என ஐயம் பூண்டுள்ளனர். மேலும், அவரின் இடது கண்களுக்கு அருகே பாம்பு 2 முறை தொடர்ந்து தீண்டியதில், உடலில் விஷம் விரைந்து பரவி இருக்கிறது.

சோகத்தில் குடும்பத்தினர்:

தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள விகாஷை பெற்றோர் இரண்டாவது முறை பாம்பு கடித்த பின்னர், அவரின் மாமா வீடு, உறவினர்களின் வீடு என மாற்று இடங்களில் வைத்து பாதுகாத்தாலும், எதுவும் பலனின்றி போயிருக்கிறது. விகாஷை தீண்டிய பாம்பு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அவரை குறிவைத்து இருக்கிறது. இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், மகனின் உயிரை காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.