Govt Hospital Inspection: நோயாளி போல் வேடமிட்டு மருத்துவமனைக்குள் ஆய்வு; மருத்துவர், பணியாளர்களின் அலட்சியத்தால் கொந்தளித்த ஐ.ஏ.எஸ்.!
இறுதியில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் கொதித்துப்போனவர், அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
மார்ச் 13, பிரோசாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்டத்தில், அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காலை 10 மணியை கடந்தும் பணிக்கு சரிவர வருவது இல்லை. இதனால் காலையில் மருத்துவ சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் அலட்சியம்: மேலும், மருத்துவமனைக்கு சென்று அவசர கதியில் சிகிச்சை எடுக்க வேண்டுவோருக்கு, பணியில் இருக்கும் செவிலியர் மருத்துவரின் பரிந்துரை மற்றும் உரிய சிகிச்சை இன்றி மருந்துகளை வழங்குதல், ஊசி போடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டு வந்துள்ளார். காலாவதியான மருந்துகளும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
குவிந்த புகார்கள்: இதுகுறித்து மக்கள் தொடர்ந்து தங்கள் புகார்களை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து, பிரோசாபாத் மாவட்ட துணை குற்றவியல் நடுவர் நீதிபதி சதுர் கிருதி ராஜ் ஐ.ஏ.எஸ் திடீரென மருத்துவமனை வளாகத்திற்கு விரைந்து ( Sadar Kriti Raj inspected) ஆய்வு மேற்கொண்டார். முதலில் சதுர் கிருதி சிகிச்சை பெற்றவரும் பெண் போல பாவித்து மருத்துவமனைக்குள் சென்றார். Restaurant Explosion: கியாஸ் கசிவு காரணமாக ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி., பலர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!
அதிரடி காண்பித்த குற்றவியல் நடுவர்: அங்கு மருத்துவ சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் மருந்து சீட்டு வாங்க உதவி கேட்பது போல, மருத்துவமனையில் இதுநாள் வரை நடந்த லட்சியங்களை அறிந்துகொண்டார். இதனையடுத்து, மருத்துவமனைக்குள் அதிகாரிகளுடன் நுழைந்து ஆய்வு மேற்கொண்டவர், காலாவதியான மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதை கடுமையாக கண்டித்து பணியாளர்களை கடிந்துகொண்டார்.
சோதனை எதிரொலியால் உஷார் நிலை: சோதனைக்கு பின்னர் மருத்துவர் மற்றும் பணியாளர்களை கடுமையாக கண்டித்தவர், தனக்கு கிடைத்த அழைப்பின் பேரில் ஆய்வு மேற்கொண்டதாகவும், இதுகுறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அம்மாவட்ட சரகத்தில் உள்ள பிற மருத்துவமனைகளும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் உஷார் நிலையில் வேலை பார்த்து வருகிறார்கள்.