Man Kills Wife For Late Tea: டீ ரெடி பண்ண 10 நிமிடமா?: ஆத்திரத்தில் மதியிழந்த கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் தலை.. நெஞ்சை பதறவைக்கு கொடூரம்.!
கணவன் டீ கேட்க, அதனை தயார் செய்ய 10 நிமிடம் கால அவகாசம் கேட்ட மனைவியை நபரொருவர் கொடூரமாக கொலை செய்த பயங்கரமா அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 21, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், போஜ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி (வயது 50). இவரின் கணவர் தர்மவீர் (வயது 52). தம்பதிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
டீ கேட்ட கணவர்: இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தைகள் அனைவரும் வீட்டின் அறையில் உறங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது, தர்மவீர் தனது மனைவியிடம் குடிக்க டீ கேட்டதாக தெரியவருகிறது. மனைவியோ பத்து நிமிடம் காத்திருக்குமாறும், டீ தயார் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். Banana Benefits: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?. அசத்தல் டிப்ஸ் இதோ.!
வாக்குவாதம் கொலையில் முடிந்தது: அச்சமயம், இவர்களிடையே திடீரென வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தர்மவீர், தனது மனைவியின் தலையால் வாளால் துண்டித்து கொலை செய்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இரத்தம் வீடெங்கும் வெளியேறி, மனைவியின் உடலை பார்த்து அழுதுகொண்டு இருந்த தர்மவீரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கழுத்தை துண்டித்து கொலை: பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், டீ தர தாமதமாகியதால் நடந்த கொடுமை அம்பலமானது.
விசாரணை: காசியாபாத் மாவட்ட துணை காவல் ஆணையர் கையன் பிரகாஷ் ராய் தலைமையிலான அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தர்மவீரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.