Banana Health (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, சென்னை (Health Tips): கடைவீதிகளில் மிக எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் வாழைப்பழம் (Banana), ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை வாங்கி சாப்பிடும் வகையில் உள்ள பொருளாகும். நமது உடல் சோர்வு அடையாமல் இருப்பதற்கும், அன்றாடம் செயல்களை செய்ய தேவையான ஆற்றலை வழங்குவதற்கும் பொட்டாசியம் சத்து அவசியம். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கலோரிகள் நமது உடல் சோர்வு போன்ற பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது.

நரம்பு மண்டலத்தை சீர்படுத்த: இதனால் தினமும் ஒரு வாழைப்பழம் கட்டாயம் சாப்பிடலாம். அது மட்டும் அல்ல, வாழைப்பழம் இரத்த சிவப்பணுக்களை அதிகமாக்கவும், நரம்பு மண்டலத்தை சீர்படுத்தவும் வாழைப்பழம் உதவி செய்கிறது. உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட், அமினோ அமிலம் போன்றவை வளர்ச்சியை மாற்றத்தை உறுதி செய்யும் என்பதால், வாழைப்பழம் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் நன்மையை அளிக்கும். Innocent Jailed 48 Years: 48 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்ததும் நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நபர்: வாழ்க்கையை இழந்த நபரின் வேதனை.! 

Banana (Photo Credit: Pixabay)

மாதவிடாய் வலிக்கு மருந்து: செரிமான பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் வாழைப்பழம், இரைப்பை மற்றும் குடல் பகுதியை பாதுகாக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை குறைக்கவும் வாழைப்பழம் உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் சி உடலுக்கு கிடைத்து உடல் நலம்பெறும். நமது ஊர்களில் கிடைக்கும் பல வகையான வாழைப்பழங்களை சுழற்சி முறையில் தினமும் ஒன்றினை வாங்கி சாப்பிடலாம்.