Car Rammed into Shops: சாலையோர கடை மீது பாய்ந்த கார்; குடிகார ஓட்டுனரால் சோகம்.. 22 வயது இளம்பெண் பலி., 6 பேர் படுகாயம்.!
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, சாலையோரம் நின்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்ச் 14, காசிப்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசிப்பூர், பந்த் பஜார் பகுதியில் நேற்று மக்கள் தங்களுக்கு தேவையான (Ghazipur Bazaar Accident) பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர். இரவு 09:30 மணியளவில் கார் ஒன்று அப்பகுதியில் வந்து, சாலையோரம் இருந்த தள்ளுவண்டியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தை கண்டு பொதுமக்கள் பதறியபடி உதவ முன்வரவே, காரை இயக்கிய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார்.
விபத்தை ஏற்படுத்தி தப்பிச்செல்ல முயற்சி: ஆனால், பதற்றத்தில் காரை இயக்கி, சாலையோரம் எதிர்திசையில் இருந்த கடைக்குள் வாகனத்தை செலுத்தி இருக்கிறார். இதனையடுத்து, ஒன்றுதிரண்ட மக்கள் கார் ஓட்டுனரை சரமாரியாக அடித்து நொறுக்கினர். அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. Cylinder Explosion In Pakistan: சிலிண்டர் வெடித்து 3 மாடிக்கட்டிடம் தரைமட்டம்… பாகிஸ்தானில் பரபரப்பு..!
இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி: இதனையடுத்து, விபத்து குறித்து காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 22 வயது இளம்பெண் உட்பட 6 க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 22 வயது இளம்பெண் சீதா தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஞ்சியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு: காயமடைந்தவர்கள் அங்குள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஓட்டுனரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.