Youths Drowned into Canal Water: கால்வாய் நீரில் மூழ்கி துயரம்; 5 இளைஞர்களின் நிலை என்ன?.. வைரலாகும் இறுதிக்காட்சிகள்.!
விடுமுறை தினத்தையொட்டி நண்பர்கள் குழு உற்சாகமாக கால்வாய் நீரில் குளித்துக்கொண்டு இருக்க, நீரின் வேகத்தில் ஐவர் அடுத்தடுத்து அடித்து செல்லப்பட்டு மாயமான சோகம் நடந்துள்ளது.
ஏப்ரல் 12, கஷ்கன்ச் (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஷ்கன்ச் (Kasganj Youth Drowned Canal Water Death) மாவட்டம், நன்றை (Nandrai Canal) கால்வாய் பகுதியில் விடுமுறை தினமான நேற்று 9-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழு உற்சாகமாக நீரில் குளித்துக் கொண்டிருந்தது. அச்சமயம் ஒருவர் நண்பர்கள் குளிப்பதை கரையில் இருந்தவாறு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக நீராடிக் கொண்டிருந்த சமயத்தில், ஒருவர் பின் ஒருவராக நீரில் பிடியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் பதறிப்போன நபர் கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்து நபர்கள் விரைந்து வந்து உதவி இருக்கின்றனர். ECI Awareness to Voters: கடலுக்கடியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சாகசம்; அசத்திய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்..!
மாயமானவர்கள் மரணமடைந்து இருக்கலாம் என அச்சம்: இதில் மூன்று பேர் மீட்கப்பட்ட நிலையில், 5 பேர் நீரோட அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உடல் கிடைத்ததும் பலி உறுதி செய்யப்படும். மாயமான இளைஞர்கள் அனைவரும் எட்டாஹ் (Etah) மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் விவரம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக நேரில் குளித்துக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கரையில் இருந்த நபர் எடுத்த வீடியோ: