பெண் பத்திரிகையாளரிடம் தகாத பேச்சு; 2 பேர் அதிரடி கைது..!
காருக்கு சாலையோரம் காத்திருந்த பெண் பத்திரிகையாளரிடம் இருவர் கும்பல் தகாத முறையில் பேசி தற்போது கம்பி எண்ணுகிறது.
ஆகஸ்ட் 16, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா (Noida) நகரில் வசித்து வருபவர் சோனால் பதேரியா (Journalist Sonal Pateria). இவர் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று செக்டர் 18, டிஎல்எப் பகுதியில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல காத்திருந்துள்ளார். இவர் கார் ஒன்றையும் புக்கிங் செய்திருந்த நிலையில், சாலையோரம் நின்று கொண்டு இருந்ததாக தெரியவருகிறது.
பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீக பேச்சு:
அச்சமயம் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கும்பல், சோனாலிடம் "உனக்கு எவ்வுளவு தொகை?" என கேள்வி எழுப்பி இருக்கிறது. நிலைமையை உணர்ந்த ஊடகவியலாளர், தனது கார் வந்ததும் அங்கிருந்து புறப்பட்டு பத்திரமாக வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், இருசக்கர வாகன எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். Man Attempts to Light Cigarette Using Porsche’s Exhaust: கார் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் சிகரெட் பற்ற வைக்க முயற்சி.. விபத்தில் முடிந்த ரீல் வீடியோ..!
இருவர் கைது:
வாகன பதிவெண் அடிப்படையில் முசாபர்நகரை சேர்ந்த அஸ்வத் பால், விபின் சிங் ஆகியோரை அடையாளம் கண்ட அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர். இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தனது சமூக வலைதளபக்கத்தில், தினசரி தனது வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்கள் குறித்த அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்து இருக்கிறார். அதன்படி, ஒவ்வொரு நாளும் ஒருவர் அவரிடம் வித்தியாசமான முறையில் பேச முயற்சிப்பதும் அம்பலமாகி இருக்கிறது.
செல்போன் நம்பரை கேட்டதில் தொடங்கி, நீ அழகாக இருக்கிறாய் என அவர் ஒவ்வொரு விஷயத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விஷயங்களை கற்றறிந்து, அதனை மக்களுக்கு தெரிவிக்கும் ஊடகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரணமாக உலகம் அறியாமல் வாழும் பெண்களின் நிலை என்னவென்று நினைத்தால் மனம் கவலைகொள்வதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.