Father Killed Daughter: வேறு ஜாதி நபரை காதலித்ததால் ஆத்திரம்; மகளின் கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
மகள் வேறொரு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து வந்ததால், உற்றார்-உறவினர்களின் அவச்சொல்லுக்கு ஆளாக இயலாது என தந்தையே மகளின் கதைமுடித்த சோகம் நடந்துள்ளது.
பிப்ரவரி 14, சித்தார்த்தா நகர் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த்தா நகர் மாவட்டம், சோஸ்திரகர் காவல் எல்லைக்குட்பட்ட காரக்வார் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
காதல் விவகாரத்தில் சிறுமி கொலை: விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது 17 வயது சிறுமியான சந்தியா என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது தாயும் தனது மகளை கண்டு கதறி அழுதார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக தாயிடம் விசாரணை நடத்தையில், சந்தியா வேறொரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவருடன் இறுதியாக சென்றபோது மகள் மாயமாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இதனால் சிறுமியை காதலித்தது யார்? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இதனிடையே சிறுமியின் தந்தை குறித்து விசாரிக்கையில், அவர் மும்பையில் இருப்பதாக கூறியிருக்கிறார். Fan Propose Cricketer Wife: ஆஸி., அணி கேப்டனின் மனைவிக்கு காதலர் தினத்தில் ப்ரபோஸ் செய்த இந்திய ரசிகர்; பேட் கம்மின்ஸின் என்ன கூறினார் தெரியுமா?..!
விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்: ஆனால், தாயின் வாக்குமூலத்தில் தடுமாற்றம் இருப்பதை உணர்ந்த அதிகாரிகள், அவரது இருப்பிடத்தை சந்தேகத்து சோதித்த போது அவர் லக்னோவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் தந்தையை கைது செய்த காவல் துறையினர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, 17 வயதான சிறுமி சந்தியா, தன்னுடன் வகுப்பில் பயின்று வரும் 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதல் வயப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பருவக்காதலுக்கு ஜாதி தடை: வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சந்தியாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனது மகளை தந்தை கண்டிக்கவும் செய்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாத சிறுமி தொடர்ந்து காதலில் உறுதியாக இருந்த நிலையில், சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின் பழியை காதலனின் மீது திருப்பி விடுவதற்கு, மகள் காதலனுடன் அழைத்துச் செல்லப்பட்டார் என நாடகமாடப்பட்டுள்ளது. இறுதியில் விசாரணைக்கு பின் உண்மையை கண்டறிந்த காவல்துறையினர், சிறுமியின் தந்தையான பிரகலாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரகாலத் தனது பெயருக்கு களங்கம் வந்துவிடும், அக்கம் பக்கத்தில் கேட்டால் என்ன சொல்வது? என்று பல கேள்விகளை முன்வைத்து இக்கொலையை அரங்கேற்றியதாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.