BJP TMC Clash in WB: பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; செய்தியாளரின் மண்டை உடைப்பு.!

மேற்குவங்கத்தில் நடைபெறும் தேர்தல் வாக்குபதிவின்போது பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதிக்கொண்ட நிலையில், கள நிருபராக பணியாற்றிய செய்தியாளரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ANI Reporter Injured (Photo Credit: @ANI X)

ஜூன் 01, கொல்கத்தா (West Bengal News): 18வது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 (General Elections India 2024) ஏழுகட்டமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது. ஜூன் 01ம் தேதியான இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்னும் 3 நாட்களில் (ஜூன் 04) அன்று ஒரேகட்டமாக (2024 Elections Results) வெளியாகிறது.

7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: மத்தியில் ஆட்சிக்கட்டிலில் அமரபோகும் அணியை எதிர்பார்த்து இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகளாவிய தலைவர்களும் காத்திருக்கின்றனர். பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகள், ஹிமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், பஞ்சாபில் 13 தொகுதிகள், உத்திரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் 1 தொகுதி என மொத்தம் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. Harbhajan Singh Casts his Vote: "உங்களுக்காக உழைக்கும் அரசை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் ஹர்பஜன் சிங் பேட்டி.! 

பாதுகாப்பு அதிகரிப்பு: ஒவ்வொரு தொகுதியிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குவங்கம் மாநிலத்தை பொறுத்தமட்டில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டித்தன்மை நிலவுகிறது. சில இடங்களில் பாஜக - திரிணாமுல் கட்சியினர் தாங்கிக்கொள்ளும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதனால் பல தொகுதிகள் பதற்றமானதாக கணிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளரின் மண்டை உடைப்பு: இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஜெய் நகர் மக்களவை தொகுதி, கேனிங் வாக்குச்சாவடி மையத்தில் திரிணாமுல் கட்சியினர் - பாஜகவினர் இடையே மோதல் சம்பவம் இன்று நடைபெற்றது. இந்த மோதல் சம்பவத்தில் இருதரப்பும் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் களநிருபர் பண்டி முகர்ஜி என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள மேடிகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

தனித்தொகுதியான ஜெய் நகர் மக்களவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ப்ரதிமா மண்டல், பாஜக சார்பில் அசோக் காந்தாரி ஆகியோர் வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.