IPL Auction 2025 Live

Online Gaming Excellence Center: ஆன்லைன் விளையாட்டுகளுக்காக சிறப்பு தொழில்நுட்ப மையம் - மத்திய இணை அமைச்சர் உறுதி..!

இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு ஷில்லாங்கில் அமையவுள்ளது என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

Minister Rajeev Chandrasekhar at Shillong (Photo Credit: PIB)

ஜனவரி 14, ஷில்லாங்: இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம் டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவன மையத்தின் கீழ், இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு ஷில்லாங்கில் (Shillong, Meghalaya) மார்ச் 2023-க்குள் அமையவுள்ளது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (Minister of State for Skill Development and Entrepreneurship, Electronics & Information Technology Minister Rajeev Chandrasekhar) தெரிவித்துள்ளார்.

ஷில்லாங் தொழில்நுட்ப பூங்காவில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பேசுகையில், "அதிநவீன டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஷில்லாங்கில் 10 ஏக்கர் வளாகத்திற்கு NIELIT திட்டமிட்டுள்ளது. மேகாலயாவில் 50000 இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் அடுத்தடுத்து வழங்கப்படும். 3 Years Old Boy Killed: தாய் – வளர்ப்பு தந்தை பகீர் செயல்.. கணவர் இறந்த 10 மாதத்தில் 3 வயது பிஞ்சை உல்லாசத்துக்காக பலிகொடுத்த தாய்.! 

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம், அடுத்த தலைமுறை ஆன்லைன் விளையாட்டு (Online Games) சூழ்நிலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவன மையத்தின் கீழ், இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு ஷில்லாங்கில் விரைவில் அமையும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஷில்லாங், கொஹிமா மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் வரவேண்டும் என்பது இலக்காகும். மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களை சேர்ந்து 1 இலட்சம் பேருக்கு எதிர்காலம் சிறக்க பயிற்சிகள் வழங்கி வேலைகள் வழங்கப்படும்” என்றார்.

அதேபோல, இந்த ஆன்லைன் விளையாட்டு குறித்து பொதுமக்கள் ஆலோசனை கேட்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் 2021-ல் சில திருத்தங்கள் செய்யப்படும் எனவும் கூறினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 14, 2023 01:35 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).