India Tour: இந்தியாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவை இவைதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

இவற்றில் மக்களால் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற இடம் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.

Template: Mamallapuram, Agra, Mumbai, Goa

டிசம்பர், 11: இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் (Indis's Most Beautiful Tourist Place) மக்கள் காணவேண்டிய இடங்கள் என்பது நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் மக்களால் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற இடம் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. அவற்றில் அனைவராலும் எளிதில் கண்டறிய இயலும் பட்டியலில் குறித்து இன்று காணலாம்.

மாமல்லபுரம் (Mamallapuram, Tamilnadu): தமிழகத்தின் சென்னை நகருக்கு அருகே பல்லவ பேரரசின் கட்டிட கலைப்பாணிகளுக்கு புகழ்பெற்று இன்றளவும் எஞ்சி நிற்கும் குடவரை கோவில் உலகளவில் கவனிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். அதனை காண ஏராளமான வெளிநாடு மக்கள் வந்து குவிவதே அதற்கு சாட்சியும் ஆகும்.

Mamallapuram Temple, Tamilnadu

ஆக்ரா (Agra): முகலாயப் பேரரசின் தனித்துவமிக்க வரலாறு, கட்டிடக்கலைப் பாணியை எடுத்துரைக்கும் தாஜ்மஹால் காதல் சின்னமாக இன்றளவில் பலராலும் பார்க்கப்படுகிறது. ஆக்ரா நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் இந்தியாவில் பார்க்கக்கூடிய இடங்களில் தனது முதல் இடத்தையும் பெற்றுள்ளது. அதேபோல, டெல்லியில் உள்ள ஜாமா மஸ்ஜித், செங்கோட்டை போன்றவை பார்வையாளர்களை கவருகின்றன.

மும்பை (Mumbai): இந்திய திரை உலக நாயகர்களின் கோட்டையாக இருக்கும் மும்பை, வர்த்தகம் உட்பட பல விஷயங்களில் உலக அளவில் கவனிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும். அழகிய கடற்கரை, மரைன் டிரைவிங், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடக்கலைப்பாணிகள் போன்றவை மும்பையில் ரசிக்கக்கூடிய இடமாகும். Curd Benefits: அடடே.. தயிருடன் இதனை கலந்து சாப்பிட்டால் இவ்வுளவு நன்மைகளா?.. இவ்வுளவு நாளாக தெரியாமல் போய்விட்டதா மக்களே., சுதாரிச்சுக்கோங்க.! 

Mumbai

ராஜஸ்தான் (Rajasthan): நிலங்களின் ராஜா என்று வர்ணிக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம், அதன் கட்டிட கலை பாணிக்கும், இயற்கையான பலவகை கற்களுக்கும் பெயர்பெற்றது. ஜோத்பூரில் உள்ள ப்ளூ சிட்டி, உதய்பூர் அரண்மனை, ஜெய்சல்மார்க், மஞ்சள் மணல் சிற்பங்கள் போன்றவை காண்போரை வியக்கவைக்கும்.

ரிஷிகேஷ் & வாரணாசி (Rishikedh & Varanashi): இந்துக்களின் புனித பூமியாக கருதப்படும் இடங்களில் முக்கியமானது ஹிமாலய மலைத்தொடரில் கங்கை நதி ஓரத்தில் அமைந்துள்ளது ரிஷிகேஷ். மன அமைதிக்கு உகந்த ஒரு இடமாகவும் ரிஷிகேஷ் இருக்கிறது. அதனைப்போலவே, வாரணாசி இந்துக்கள் பெரும்பான்மையாக படையெடுக்கும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது.

Rishikesh

கோவா (Goa): இந்தியாவில் பல்கலாச்சாரத்தைக் கொண்ட இடமாக விளங்கி வருவது கோவா. முழுக்க முழுக்க சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற இம்மாநிலத்தில் உள்ள கடற்கரைகளும், கடற்கரையை ஒட்டி இருக்கும் அழகிய வீடுகளும், ஆடம்பர கலாச்சார கேளிக்கை கூத்துகளும் பிரபலமான ஒன்றாகும்.

கேரளா (Kerala): தெய்வங்களின் பூமி என்று பலராலும் போற்றப்பட்ட கேரளா மாநிலம், சொர்க்கம் என்றும் வர்ணிக்கப்படுகிறது. இங்குள்ள ஆலப்புழா படகு வீடுகள், புதிதாக பிடித்து சமைக்கப்படும் மீன்கள், இரவு நேர கண்கவர் கேளிக்கை கூட்டங்கள், இயற்கையான சுத்தமான காற்று போன்றவை உடலுக்கும் மனதுக்கும் வலுசேர்க்கும்.

Kerala & Darjiling

டார்ஜிலிங் (Darjiling): இமயமலையை கண்ணெதிரே பார்க்கும் வகையில் இயற்கையாக அமையப்பெற்று, மலை மீது பல வளைவு நெளிவுகளுடன் பயணம் செய்து, குளுகுளு சூழலை அனுபவிக்க உகந்த இடம் டார்ஜிலிங். தமிழகத்துக்கு ஊட்டியை போல இருக்கும் டேராடூன் இயற்கையை ரசிக்க உகந்த இடமாகும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 01:59 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif