Ayushman Bhava Inauguration: ஒவ்வொரு கிராமத்திற்கும், நகரத்திற்கும் உயர்தர சுகாதார பாதுகாப்பு-‘ஆயுஷ்மான் பவ’ இயக்கம்: காணொலி வாயிலாக துவக்கம்.!
இதை ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று காணொலி முறையில் துவங்கி வைக்கிறார்.
செப்டம்பர் 13, புது டெல்லி (Political News): இந்தியா முழுவதிலும் உயர்தர சுகாதார சேவை அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்காக “ஆயுஷ்மான் பவ’ இயக்கம் தொடங்க உள்ளது. இந்த இயக்கத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்த பிரத்தியேகமான இயக்கம் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (Universal Health Coverage) அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அமையும். இந்த இயக்கத்தின் தொடக்க விழாவில், மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா,அமைச்சர் பாரதி பிரவீன் பவார் மற்றும் அமைச்சர் எஸ் பி சிங் பாகெல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். Vietnam Apartment Fire: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 50 பேர் பலி., 54 பேர் படுகாயம்.!
மேலும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு காணொலி முறையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டம் இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் சிறந்த முறையில் சுகாதார பாதுகாப்பை வழங்க தொடங்கப்பட்டது ஆகும். ஆயுஷ்மான் பவ இயக்கம், மற்ற அரசு துறைகள் மற்றும் நகர்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படும் என்று தெரிகிறது.
புவியியல் தடைகளை பொருட்படுத்தாமல், நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமமும், நகரமும் சுகாதார பாதுகாப்பில் பின்தங்கிவிடாமல் அனைத்து சேவைகளையும் பெறுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளில் ‘ஆயுஷ்மான் பவ’ திட்டம் சிறப்பான முறையில் தொடங்கப் போகிறது.