நவம்பர் 20, சென்னை (Chennai News): குழந்தைகளை பார்த்தாலே பலரும் ஆர்வத்துடன் கட்டியணைத்து அவர்களை முத்தமிடுவார்கள். குழந்தைகளை முத்தமிடுவதால் நமக்கு அன்பு மகிழ்ச்சி போன்றவை கிடைக்கும் என்றாலும், குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய நோய் தொற்றை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மோசமான சுவாச பிரச்சனை மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்பு போன்றவை ஏற்படும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. Health Tips: குளிர்கால சரும நோயால் அவதிப்படுறீங்களா?.. தடுப்பது எப்படி?.. இந்த விஷயத்தில் கவனம்.!
ஆய்வில் தகவல்:
ஸ்வீடன் நாட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2022 வரையில் சுமார் 2.3 பில்லியன் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், ஆரோக்கியமாக பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் ஆர்எஸ்வி தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது. அதனால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் உடல் நலம் தேறி இருக்கின்றனர். 12% குழந்தைகள் மோசமான உடல்நலத்தையும் எதிர்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மூன்று மாதத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளை RSV தொற்று எளிதில் தாக்குவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கவனம் தேவை:
எந்த ஒரு நோயுமின்றி ஆரோக்கியமான முறையில் பிறந்த குழந்தைகளுக்கும் குளிர்காலத்தில் ஆர்எஸ்வி தொற்று ஏற்படும். குறைந்தது 3 வயது வரை உள்ள குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளை முத்தமிடும் போது மூக்கு அல்லது வாய் வழியாக வைரஸ் தொற்று நுழைந்து குழந்தைகளுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும். குழந்தைக்கு ஆசையாக முத்தம் கொடுக்க வருபவர் தனக்கு இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சினைகள் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.