Cyclone Alert: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை..!

தென்மேற்கு வங்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Cyclone Michaung (Photo Credit: @LatestLY X)

மே 22, புதுடெல்லி (New Delhi): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த அமைப்பு வடகிழக்கு நகர்ந்து மே 24 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் வடக்கு கடற்கரையில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மே 23 முதல் 24 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்.

மே 23 முதல் 27 வரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் புயலின் தாக்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மே 28-ம் தேதி குஜராத் மற்றும் மும்பையில் கனமழை பெய்யும். கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மே 23-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும். மே 23 வரை பல மாநிலங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் பிற மாநிலங்களில் மே 23 வரை லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Nellore Road Accident: கண்டெய்னர் லாரி மீது மோதிய பேருந்து.. தரம்புரண்ட வண்டிகள்.. நெல்லூரில் கொடூர விபத்து..!

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மேலும் இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறும்போது, ​​“இன்று காலை தென்மேற்கு வங்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது, அது படிப்படியாக வலுவடைந்து மத்திய வங்கக் கடலில் மே 24 காலை வடகிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு தொடர்ந்து நகர்ந்து தீவிரமடையும். இந்த கடல் நிலை மீனவர்களுக்கு பாதுகாப்பற்றது. எனவே அவர்கள் இன்றே கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் கிழக்கு கடற்கரை மாநிலங்கள் மற்றும் அந்தமான் மீனவர்களுக்கு எச்சரித்துள்ளோம்." என்று கூறியுள்ளார்.