Man Escapes from Death: ஓடும் இரயிலில் ஏற முயற்சி.. நூலிலையில் உயிர்தப்பிய இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

அதிஷ்டம் காரணமாக இளைஞர் ஒருவர் இரயில் சக்கரம் - நடைமேடை இடையே விழுந்து, எந்த விதமான உயிர் அச்சுறுத்தல் காயமும் அடையாமல் தப்பித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Man Escapes from Death (Photo Credit: @NDTV X)

டிசம்பர் 22, சமஸ்திபூர் (Bihar News): இந்தியாவின் பொதுப்போக்குவரத்தில் ஏழை,எளிய மக்கள் முதல், பெரிய தொழிலதிபர்கள் வரை அதிகம் பயன்படுத்தப்படும் இரயில் போக்குவரத்து, மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான மத்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். விரைவு ரயில்களில், முன்பதிவு பெட்டிகளில் இரயில்வே காவலர்கள் பணியில் இருக்கின்றனர். இரயிலில் பயணம் செய்யும் பயணிகள், இரயில் பயணத்தின்போது குறித்த நேரத்திற்கு முன்னதாகவே இரயில் நிலையங்களுக்கு வந்து காத்திருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். Woman Suicide Attempt: புஷ்பா 2 படம் பார்க்க காதலன் மறுப்பு.. 3வது மாடியில் இருந்து குதித்த பெண்.., அதிர்ச்சி சம்பவம்..!

அதிஷ்டத்தால் உயிர்பிழைப்பு:

இறுதி நேரத்தில் அவசர கதியில் இரயிலை பிடிக்க முற்பட்டு வந்தால், அவை சில நேரம் விபத்தில் முடிகிறது. குறிப்பாக ஓடும் இரயிலில் ஏறுவது, இறங்குவது அல்லது அதற்கான முயற்சிகளை எடுப்பது, சிலநேரம் உயிரையே பறிக்கும் ஆபத்துகளை கொண்டவை ஆகும். இதுகுறித்து தொடர் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், ஒருசில நேரம் பயணிகளின் நேரமின்மை காரணமாக இவ்வாறான செயல்கள் நடக்கிறது. இதனிடையே, ஓடும் இரயிலில் ஏற முற்பட்ட நபர், கால் இடறி நகரும் இரயில் - நடைமேடை இடையே இருக்கும் குறுகிய இடத்தில் விழுந்தார். நல்வாய்ப்பாக அவர் எந்த விதமான காயமும் இன்றி அதிஸ்டவசத்தால் உயிர்தப்பிய சம்பவம் சமஸ்திபூர் இரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இதன் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. Road Accident: நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து; 4 பேர் பரிதாப பலி..! 

நடைமேடை - இரயில் சக்கரம் இடையே சிக்கிய பயணி:

பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் (Samastipur Railway Station) இரயில் நிலையத்தில், தர்பங்கா - புதுடெல்லியை இணைக்கும் பீகார் சமர்பர்க் கிரந்தி (Bihar Sampark Kranti Express) எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணி ஒருவர் ஏற முற்பட்டார். அவர் தாமதமாக இரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், ஓடும் இரயிலில் ஏற முற்பட்ட காரணத்தால் கால் இடறி நடைமேடை - இரயில் சக்கரம் (Stuck Between Platform & Train) இடையே விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக அவருக்கு எவ்வித காயமும் இல்லை. உயிர் பயத்தில் விழுந்தபடி அவர் அசைவற்று இருந்தார். இதனால் இரயில் நிலையத்தை கடந்து சென்றதும், பயணிகள் அவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் குரங்குகளுக்குள் வாழைப்பழத்திற்காக நடந்த சண்டையில், சமஸ்திபூர் இரயில் நிலையத்தின் மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. உயர் மின்னழுத்த கம்பியில் குரங்குகள் சண்டையிட்டு, ஒட்டுமொத்த மின்சாரத்தையும் துண்டிக்க காரணமாக அமைந்தது.

நடைமேடைக்கும் - இரயில் சக்கரத்திற்கும் நடுவே சிக்கி, நூலிழையில் உயிர்தப்பிய நபர்:

समस्तीपुर रेलवे स्टेशन पर युवक के ऊपर से गुजर गई ट्रेन, फिर भी एक खरोंच तक नहीं आई, बाल-बाल बची जान#samastipur #news pic.twitter.com/OLJIS5w57g

— Samastipur Town (@samastipurtown) December 21, 2024