Road Accident (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, அனந்தபூர் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், அனந்தபூர் (Anantapur) மாவட்டம் அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று சத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வேனில் சென்றுள்ளனர். Viral Video: கள்ளக்காதலனை கரம்பிடிக்க உதவிய கணவர்.. வினோத சம்பவம் அரங்கேற்றம்..!

லாரி மீது வேன் மோதி விபத்து:

பின்னர், இன்று (டிசம்பர் 21) அதிகாலை ஊருக்கு திரும்பும் போது புல்லா சமுத்திரம் அருகே சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி (Lorry - Van Accident) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரத்னம்மா (வயது 70), மனோஜ் (வயது 32), பிரேம் குமார் (வயது 30), அதர்வா (வயது 2) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.