JK Udampur Accident: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து; 3 பேர் துள்ளத்துடிக்க பரிதாப பலி.!
லாரி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், ஒருவர் இடிபாட்டிற்குள் சிக்கி போராடி உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 24, ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் கனரக வாகனம் இன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
சாலையில் பயணித்த வாகனம் எதிர்பாராத விதமாக நிலைகுலைந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரியவருகிறது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். North Korea Ballistic Missile: மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய வடகொரியா; உறுதி செய்த ஜப்பான் பிரதமர்.!
உதம்பூர் மாவட்டத்தின் துடு பகுதியில் நடந்த விபத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலியானோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகிய நிலையில், வாகனத்தின் அடியில் சிக்கியவர் உடல் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.