Father Honor Killing Daughter: காதலனுடன் வீடியோ காலில் பேசிய மகளை மகன்களுடன் சேர்ந்து கொன்ற தந்தை.. ஆணவத்தில் குடும்பமாக வெறிச்செயல்.!
மகள் காதல் வயப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆவணத்தில் செய்த செயலால் பலியான உயிரின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 21, சக்ரதர்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா (Chaibasa, Jharkhand) மாவட்டம், சிங்பூம் சக்ரதர்பூர் (Chakradharpur) பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா அகமத் (Mustafa Ahmad). இவருக்கு முகம்மத் வாகிங்ஸ், முகம்மத் ஷாட் (Mohammad Waqas and Shaad) என 2 மகன்களும், சதியா கௌஸர் (Sadia Kaushar) என்ற மகளும் பிள்ளைகளாக இருக்கின்றனர். இவர்களில் சதியா செல்போன் உபயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டவர்.
இந்நிலையில், அவர் இளைஞர் ஒருவரை காதலித்து (Fall in Love) வந்துள்ளார். அவருடன் கடந்த பிப்ரவரி 9ம் தேதி இரவில் வீடியோ (Video Call) கால் பேசியுள்ளார். இதனை சதியாவின் தந்தை பார்த்துவிட, தனது 2 மகன்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். மேலும், மகள் இன்னொருவருடன் காதல் வயப்பட்டுள்ளதால், உறவினர்கள் (Relatives) என்ன நினைப்பார்கள், தனது மானம் என்ன ஆவது என ஆவேசப்பட்டுள்ளார். Youngster Turned Thief: இன்ஸ்டாகிராம் காதலிக்கு கிப்ட் கொடுக்க பக்கத்து வீட்டில் நகை களவாடிய இளைஞர் கைது..! சிவராத்தியில் நோட்டமிட்டு கைவரிசை.!
இவரின் கருத்துக்களுக்கு சதியா எதிர்கேள்விகளை எழுப்ப, ஆத்திரமடைந்த முஸ்தபா, தனது 2 மகன்களுடன் சேர்ந்து மகளை (Honor Killing) அடித்தே கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை யாருக்கும் தெரியாமல் ஊருக்கு ஒதுக்குபுறமான கிணற்றில் கல்லைக்கட்டி வீசியுள்ளார். பின்னர், கடந்த பிப்ரவரி 13ம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் போலியான புகாரை கொடுத்துள்ளார்.
அதாவது, தனது மகளை காணவில்லை என்றும், அவர் இறுதியாக காதலனிடம் பேசிக்கொண்டு இருந்தார். எனது மகளை காதலித்த இளைஞர், அவரை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பார் என்ற அச்சம் இருப்பதாக கூறியுள்ளார். இவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக பெற்றெடுத்த மகளை தந்தையை (Honor Killing) கொலை செய்தது அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் தந்தை, மகன்களான 3 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மூவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.