LPG Cylinder Truck Overturned: தறிகெட்டு ஓடிய சிலிண்டர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து: ஒருவர் பலி., 6 பேர் படுகாயம்.!
ஓட்டுனரின் கட்டுபாட்டை சிலிண்டர் ஏற்றி வந்த லாரி இழந்ததன் எதிரொலியாக, இருசக்கர வாகனத்தில் வந்தவர் உடல் நசுங்கி பலியான சோகம் நடந்துள்ளது.
நவம்பர் 27, கோட்டா (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோட்டாவில், ஞாயிற்றுக்கிழமை மாலை சிலிண்டர் ஏற்றிவந்த லாரி கோட்டா - லால்மதியா சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்தது.
அதிவேகத்தில் பயணம் செய்த லாரி, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நடந்து வந்த நபர், உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். Free Visa to Malaysia: மலேஷியா செல்லும் இந்தியர்களுக்கு உற்சாக செய்தி: விசா இல்லாமல் இந்திய மக்களை அனுமதிக்க அறிவிப்பு.!
சிலிண்டர் லாரி சாய்ந்து கவிழ்ந்ததால், சாலையோரம் இருந்த 6 பேரின் மீது சிலிண்டர் உருண்டு ஓடி, அவர்கள் கீழே விழுந்ததில் லேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாகூர்கங்கிடி காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நல்வாய்ப்பாக சிலிண்டர் தீப்பிடித்து பெரும் விபத்து ஏதும் ஏற்படவில்லை. விபத்தில் உயிரிழந்தவர் குறித்து விசாரிக்கையில், அவர் கோல்படா பகுதியை சேர்ந்த பிரேம் குமார் பவன் (வயது 46) என்பது தெரியவந்தது.