Karnataka Honor Killing: தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை காதலித்த மகள் ஆணவக்கொலை; தந்தை வெறிச்செயல்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

மகளின் நடவடிக்கையை கண்காணிக்காத குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

Parappana Agrahara Police Station (Photo Credit: Twitter)

அக்டோபர் 23, மைசூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், கலிகுண்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷா (வயது 50). இவரின் மனைவி சாரதா. சாரதாவின் தங்கை கீதா, இவர்களின் உறவினர் சாந்தகுமார். கணேசன் - சாரதா தம்பதிக்கு பல்லவி என்ற மகள் இருக்கிறார்.

இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் நிலையில், தன்னுடன் பள்ளி பருவத்தில் இருந்து பயின்று வந்த மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிய வருகிறது. அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் ஆவார், பல்லவி ஒபிசி பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்தவர்.

இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பெண்மணி தனது வீட்டிலிருந்து வெளியேறி, காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, தனது மகள் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், காதலருடன் இருந்த பெண்மணியை மீட்ட அதிகாரிகள் மீண்டும் பல்லவியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். UP Lady Cop Dismissed: ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு பணியிடைநீக்கம்.. வேலைக்கு சேர்ந்த 48 மணிநேரத்தில் பணிநீக்கம்.. பெண் காவலருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்.! 

இதனிடையே, அக்டோபர் 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று சம்பந்தப்பட்ட இளைஞர் பல்லவியை காண அவர்களின் வீட்டிற்கு சென்றதாக தெரிய வருகிறது. இந்த தகவல் பல்லவியின் தந்தை கணேசனுக்கு தெரிய வந்து, அவர் ஆத்திரமுற்று வீட்டிற்குள் தனது மகளை மனைவி மற்றும் குடும்பத்தினர் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார்.

இறுதியில், வாக்குவாதத்தின் போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கணேசன், தனது மகள் பல்லவியை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும், அதனை தடுக்க வந்த மனைவி மற்றும் உறவினர், மனைவியின் தங்கை என அனைவருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.

அங்கிருந்து தப்பிச்சென்ற கணேசன், நேற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார காவல் நிலையத்தில் விஷயத்தை கூறி சரணடைந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.