Former UP Lady Constable Priyanka Mishra (Photo Credit: @IndiaToday Twitter)

அக்டோபர் 23, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு, அம்மாநில காவல்துறை தேர்வு எழுதி தேர்ச்சியாகி காவல் அதிகாரியாக பொறுப்பேற்ற பெண் காவலர் பிரியங்கா மிஸ்ரா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு துப்பாக்கியுடன் காவலர் சீருடையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தார்.

இந்த வீடியோ அங்குள்ள சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் வைரலான நிலையில், பணி நேரத்தில் அலட்சியமாக செயல்பட்டது, கடமை தவறியது உட்பட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது வரை அவர் பணியிட நீக்கத்தில் இருந்து வந்த நிலையில், தான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பல கடிதங்களை எழுதி சமீபத்தில் மீண்டும் வேலையை பெற்றதாக தெரியவருகிறது. Asian Para Games Men's High Jump: பாரா ஆசிய விளையாட்டுகளில் இந்தியவுக்கு முதல் தங்கம், வெள்ளிப்பதக்கம்; சைலேஷ் குமார், தங்கவேல் மாரியப்பன் சாதனை.! 

இந்நிலையில், பணியாற்ற தொடங்கிய 48 மணிநேரத்தில், அவர் உத்திரபிரதேசம் மாநில காவல்துறையில் இருந்து ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஆக்ராவில் பணியில் சேர பணியானையும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வேலைக்கு சேர்ந்த 48 மணி நேரத்தில் அவரின் பதவி பறிக்கப்பட்டது.

தனக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வந்ததை உறுதி செய்த பெண் காவலர் ஆக்ராவுக்கு சென்று பணியிலும் சேர்ந்து வேலை பார்த்த நிலையில், 48 மணி நேரத்தில் அவரது வேலையானது பறிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஆணையர் பிரித்திங்கர் சிங், அவரின் பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரை பணியில் இருந்து முற்றிலும் நீக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.