Living Together Women Killed: லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற காதலன்.. ஐ.டி ஊழியர் பகீர் செயல்.!
விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, பெண்மணியின் லிவிங் டுகெதர் காதலன் கைது செய்யப்பட்ட பின்னணி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
மார்ச் 14, கோரமங்களா (Karnataka News): ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ககனசக்தி அர்ச்சனா (வயது 28). விமான பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார். மென்பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஆதேஷ். இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல், லிவிங் டுகெதர் முறையில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கோரமங்களா, ரேணுகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். கடந்த 10ம் தேதி இரவில் அர்ச்சனாவுக்கும் - ஆதேஷுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. ஆத்திரத்தில் அர்ச்சனா கோபத்துடன் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது தளத்திற்கு சென்ற அர்ச்சனா, அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழக்க, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோரமங்களா காவல் துறையினர் அர்ச்சனாவின் உடலை பார்வையிட்டனர். Shocking Video: ஒரே நொடியில் மரண பயத்தை சந்தித்த பெண்கள்.. 6,300 அடி உயரத்தில் அறுந்துபோன ஊஞ்சல் கம்பிகள்.. பகீர் வீடியோ.!
பின்னர், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை முன்னெடுத்தனர். அர்ச்சனாவின் தாயாரும் தனது மகளை ஆதேசே மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருப்பார் என குற்றச்சாட்டை முன்வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், காதலனின் கொடூர செயல் அம்பலமானது. கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆதேஷுக்கு, டேட்டிங் செயலி மூலமாக அர்ச்சனா அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 7 மாதமாக கணவன் - மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று தம்பதி திரைப்படத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது தகராறு நடந்துள்ளது. இந்த தகராறில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஆதேஷ், ககனசக்தி அர்ச்சனாவை தாக்கி இருக்கிறார். பின்னர், நான்காவது மாடியில் இருந்து கதையை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் என்பது அம்பலமானது.
விசாரணைக்கு பின்னர் ஆதேசை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.