Girl Dies after Falling Sambar Pot: பள்ளிக்கூட சமயலறையில் பயங்கரம்: சாம்பார் அண்டாவில் தவறி விழுந்த 8 வயது சிறுமி பரிதாப பலி.!
பள்ளிக்கூடத்திற்கு படிக்க சென்ற சிறுமி, சாம்பார் அண்டாவுக்குள் விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடி மரணமடைந்த சோகம் கலபுராஹியில் நடந்துள்ளது.
நவம்பர் 20, கலபுராகி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டம் (Kalaburagi, Karnataka), அப்சல்பூர் தாலுகாவில் உள்ள சின்னமகரே அரசு பள்ளியில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி குழந்தைகளுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.
அப்போது, அங்கிருந்த சாம்பார் பாத்திரத்தில், பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த 8 வயது சிறுமி மகத்தம்மா சிவப்பா ஜமதார் (Mahanthamma Shivappa Jamadar) எதிர்பாராத விதமாக சாம்பார் வாளிக்குள் விழுந்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரத்தில், 50 விழுக்காடு தீக்காயத்துடன் மீட்கப்பட்டு இருக்கிறார். உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியை கலபுராஹியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். Team India Players Cry: சொந்த மண்ணில் தோல்வியடைந்த இந்தியா: கண்ணீரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. மனதை கலங்கவைக்கும் காட்சிகள்.!
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிம்ஸ் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 19 ஆம் தேதி உயர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தாய் சங்கீதா சிவப்பா தலவார் (Sangeetha Shivappa Talawar) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லாலாபி நடாப், துணை தலைமை ஆசிரியர் ராஜூ ஜவான், தலைமை சமையலர் கஸ்தூரி தலக்கேரி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இவர்கள் மூவரும் பணியில் இருந்தும் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், விரைவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் பள்ளியில் உள்ள மாணவர்கள் மத்திய உணவுக்கு முண்டியடித்து வந்து உணவைப்பெற முயற்சித்தது, அவர்கள் வரிசையில் வரத் தவறியது, அதனை கடைபிடிக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்காதது, அதற்கான முயற்சியை எடுக்காததே காரணம் என தெரியவந்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)