ICC CWC Final 2023 Team India (Photo Credit: X)

நவம்பர் 19, குஜராத் (Sports News): 50 ஓவர்கள் கொண்ட 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 பட்டத்தை ஆஸ்திரேலியா தட்டிச்சென்றது. முந்தைய 9 தரநிலை ஆட்டத்திலும் வெற்றியடைந்த இந்தியா, இறுதியில் தோல்வியை சந்தித்தது. தொடக்கத்தில் 2 போட்டிகளில் ஆஸி., தோல்வி அடைந்தாலும், கோப்பையை போராடி தனதாக்கியது.

இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்தியா, ஆஸி., வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அணியினருக்கும் ஏற்பட்ட மனவலிமை குறைந்து, பதற்றம் உண்டாகி தோல்வி வசமானது. விளையாட்டில் மிக முக்கியமாக கருதப்படும் மனவலிமை குறைந்தது ஆஸி., அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ICC CWC 2023 Champion Australia: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: இறுதிவரை பதைபதைப்பை தந்த ஆட்டம்., சொந்தமண்ணில் இந்தியா படுதோல்வி.! 

Team India ICC CWC 2023 Final (Photo Credit: X)

இதனால் 6வது முறையாக உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் கோப்பையை வென்றுள்ளது. இந்திய மண்ணில் வெற்றிகண்ட ஆஸ்திரேலிய அணி, வெற்றிக்கோப்பையுடன் தனது நாட்டிற்கு பயணிக்கவுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் முகம்மது சிராஜ், ரோஹித் ஷர்மா உட்பட பலரும் தோல்வியால் கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவரையொருவர் வருத்தத்தில் இருந்தபோதும், ஆறுதல் கூறி மனதை தேற்றி வருகின்றனர்.

சொந்த மண்ணில் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோல்விகண்டண்டது ரசிகர்களிடமும் வருத்தத்தை அளித்தது. இதனால் அரங்கத்தில் இருந்து முன்னதாகவே ரசிகர்கள் புறப்பட்டு செல்லவும் தொடங்கினர். தோல்வியின் வலிகளே மனிதனை சிற்பியாய் செதுக்கும். வெற்றிக்காக தொடர்ந்து உழைக்க வேண்டியது அவரவர் கடமை.

ரோஹித் கண்கலங்கும் காட்சி: