Karnataka Politics: விவசாயி மகனை திருமணம் செய்தால் பெண்களுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி - அறிவிப்புகளால் களைகட்டும் கர்நாடக அரசியல்.!
விவசாயிகளின் மகன்களுக்கு பலரும் பெண் கொடுப்பது இல்லை. நமக்கு சோறு போடும் தெய்வங்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என குமாரசாமி பேசினார்.
மார்ச் 10, தும்கூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் நடப்பு ஆண்டு சட்டப்பேரவை (Karnataka Assembly Poll 2023) தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வியூகங்களை வகுத்து அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் தற்போதில் இருந்தே ஈடுபட்டு வருகிறது. ஆளும் கட்சியான பாஜக (BJP) தனது ஆட்சியை தக்கவைக்க தற்போது என்ன செய்யப்போகிறது என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி (H.D Kumarasamy), அம்மாநிலத்தில் பஞ்சரத்னா யாத்திரை நடத்துகிறார். இதன் வாயிலாக நேற்று தும்கூர் (Tumakuru) மாவட்டம் திப்தூரில் யாத்திரை நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடையே (H.D Kumarasamy Latest Speech) குமாரசாமி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "விவசாயிகள் (Farmer) ஒருபோதும் கடன்காரர்களாக இருக்க கூடாது. நான் நமது பஞ்சரத்னா திட்டத்தில் சேர்த்துள்ள பல திட்டங்களால் விவசாயிகள் நல்ல பலன் அடைவார்கள். பருவகாலம் தொடங்கும் முன் உழவு பணிகளை மேற்கொள்வதற்கு என ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பணம் வழங்கப்படும். AIADMK SriRangam Poster: “எல்லாத்தையும் இழந்துவிட்டோம். இப்போதாவது ஒன்றிணையுங்கள்” – ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தரப்புகளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த கோரிக்கை.!
அதிகபட்சமாக 10 ஏக்கர் வரையில் ரூ.1 இலட்சம் தொகை வழங்கப்படும். இதனால் உளவு பணிகள் நடைபெறும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு என தரமான கல்வி வழங்குதலை உறுதி செய்வோம். இதற்காக கிராமங்களில் பஞ்சாயத்து தோறும் அரசு பொதுப்பள்ளிகள் தொடங்கி வைக்கப்படும்.
கிராமங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் சுகாதார நிலையங்களும் நிறுவப்படும். என்னிடம் மனுகொடுத்த விவசாயிகள் தங்களின் பிள்ளைகளுக்கு யாரும் பெண் கொடுப்பது இல்லை என்ற வேதனையையும் பதிவு செய்தார்கள். அவர்களின் கோரிக்கைக்கு நான் தீர்வு கண்டுள்ளேன்.
கர்நாடக சட்டப்பேரவையை நமது தலைமையிலான அரசு தேர்தலில் வெற்றியடைந்து கைப்பற்றினால், விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி வழங்கப்படும். விவசாயிகள் நமக்கு சோறு போடுபவர்கள். அவர்களை நல்லபடியாக வைப்பது நமது கடமை" என கூறினார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)