TH Musthafa Passes Away: கேரள காங்கிரசின் முக்கிய புள்ளி, முன்னாள் அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்.!

முன்னாள் முதல்வர் கருணாகரனின் தலைமையிலான கேரள அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் காலமானார்.

TH Musthafa (Photo Credit: @ANI X)

ஜனவரி 14, கொச்சி (Kerala News): கேரள அரசியலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், முன்னாள் அமைச்சருமாக பணியாற்றியவர் டி.எச் முஸ்தபா (TH Musthafa). இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரையில், அன்றைய முதல்வர் கருணாகரனின் தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் குடிமைப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார்.

உடல்நலக்குறைவால் காலமானார்: கேரளா அரசியலில் மிக முக்கிய புள்ளியாக வலம் வந்த முஸ்தபாவுக்கு, தற்போது 81 வயதாகிறது. இதனால் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடலில் இருந்து உயிர் பிரிந்துள்ளது. Pothole Saves Life: உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் திடீரென விழித்ததால் அதிர்ச்சி: சாலையில் இருந்த பள்ளத்தால் நடந்த அதிசியம்.! 

இன்று இறுதிச்சடங்கு: இவர் காலமான செய்தி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 8 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்தபா எர்ணாகுளத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவராக 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றியவர் ஆவார்.

25 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினர்: கடந்த 1977 ஆம் ஆண்டு அலுவா தொகுதியில் இருந்து அம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட முஸ்தபா, குன்னத்தக்காடு தொகுதியில் நான்கு முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டு சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரின் மறைவு கேரள காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு ஆகும்.