ஜனவரி 13, பாட்டியாலா (Punjab): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா, கர்னல் பகுதியை சார்ந்தவர் தர்ஷன் சிங் பரார் (வயது 80). இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் கர்னல் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு: அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் குடும்பத்தினர் வீட்டில் இறுதி சடங்குக்காக ஏற்பாடுகளை செய்துள்ளனர். உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தர்ஷனின் வீட்டிற்கு வந்துள்ளனர். Chemical Lab Leakage: வேதியியல் ஆய்வகத்தில் திடீர் வாயுக்கசிவு: 20 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிப்பு.!
சாலையில் இருந்த பள்ளத்தால் நடந்த சம்பவம்: இதனிடையே, மருத்துவமனையில் இருந்து அவசர ஊர்தி உதவியுடன் தர்சனின் உடல் உறவினர்களால் எடுத்து செல்லப்பட்டது. அப்போது, அவசர ஊர்தி அதிவேகத்தில் பயணித்ததாக தெரியவரும் நிலையில், சாலையில் இருந்த பள்ளம் ஒன்றில் வாகனம் ஏறி-இறங்கி சென்றுள்ளது.
அச்சமயம் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தர்ஷன் சிங் திடீரென விழித்துள்ளார். இதனால் பதறிப்போன உறவினர், மீண்டும் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அங்கு அவரின் உடலில் உயிர் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், உடல் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
VIDEO | Darshan Singh, who was 'declared dead' by doctors in Punjab's Patiala, is undergoing treatment at a hospital in Karnal. Singh is alive, but said to be in critical condition.
Follow this thread to read the details of the 'miracle' as narrated by Singh's family member. pic.twitter.com/U5Th4U4Osd
— Press Trust of India (@PTI_News) January 12, 2024