DMK Supporter Killed: திமுக பெண் பிரமுகர் வெட்டிக்கொலை.. பேஸ்புக் நேரலையில் வீடியோ வெளியிட்ட கணவர்.!

கேரள மாநிலம் கொல்லத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்பின் முகநூல் நேரலையில் தான் கொலை செய்த தகவலை வீடியோவாக பதிவிட்டார்.

DMK Women Wing Leader Killed in Kollam Kerala (Photo Credit : Youtube)

செப்டம்பர் 23, கொல்லம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் கலயநாடு பகுதியில் வசித்து வருபவர் ஐசக் மேத்யூ (வயது 44). இவரது மனைவி ஷாலினி (வயது 39). மேத்யூ கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில், ஷாலினி அங்குள்ள பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். தம்பதிக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக ஷாலினி தனது மகன்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மனைவியை வெட்டிக்கொலை :

மேத்யூ மனைவியை வீட்டிற்கு அழைத்தும் பலனில்லை. இதனால் நேற்று காலை 6 மணியளவில் மாமனார் வீட்டிற்கு சென்றவர் மனைவியை மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ஷாலினி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்தவர் மகன்களின் கண்முன் மனைவி ஷாலினியை அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஷாலினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தப்பி சென்ற மேத்யூ முகநூல் நேரலையில் தான் கொலை செய்ததை வீடியோவாக பேசி பதிவிட்டுள்ளார். GST Tax Slabs: அடுத்த தலைமுறைக்கான புதிய ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமல்.. எந்தெந்த பொருட்களின் விலை மாற்றம்? முழு விபரம் உள்ளே.!

பேஸ்புக் நேரலையில் தகவல் தெரிவித்த கணவர் :

அவர் கூறியதாவது, "நான் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். இதுவரை கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், நகைகளையும் மனைவியிடம் கொடுத்து வைத்திருந்தேன். எனது மனைவி அனைத்தையும் வீணடித்து விட்டார். எனக்கு இரு மகன்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், எனது மனைவி ஆடம்பரமாக வாழ நினைத்து சண்டையிட்டார். குடும்ப தகராறு காரணமாக பெற்றோர் வீட்டில் தங்கி இஷ்டம்போல் செலவு செய்து வாழ்ந்து வருகிறார். இப்படி அவர் வாழத் தேவையில்லை என்பதால் அவரை கொலை செய்து விட்டேன்" என தெரிவித்துள்ளார்.

திமுக மகளிர் அணி செயலாளர் மரணம் :

இதன் பின்னர் காலை 9 மணி அளவில் காவல் நிலையத்தில் தான் மனைவியை கொலை செய்து விட்டதாக மேத்யூ சரணடைந்தார். மேத்யூ கொடுத்த தகவரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஷாலினி கொல்லம் மாவட்ட திமுக மகளிர் அணி செயலாளராக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement