செப்டம்பர் 22, புதுடெல்லி (New Delhi News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு (Govt of India) கடந்த 2017ம் ஆண்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பொருட்களை ஒரே வரி திட்டத்தின் கீழ் கொண்டு வரும் பொருட்டு, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இதனால் ஒவ்வொரு மாநில அளவில் பிரிந்து கிடந்த மறைமுக வரிகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நிதிப்பகிர்வு மத்திய அரசின் கைகளுக்கு சென்றது. இந்த ஜிஎஸ்டி வரி அடுக்குகளின் (GST Tabs Old Slabs) கீழ் 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளில் பொருட்களுக்கேற்ப வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சீர்திருத்த நடவடிக்கையின் புதிய அத்தியாயம், எதிர்கால தலைமுறைக்கான ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பான நடவவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு இருந்தார். இதன்பேரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், கடந்த செப்டம்பர் 03ம் தேதி டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப்பின் ஜிஎஸ்டி வரியில் 2 அடுக்குகளை (GST Tax New Slabs) ரத்து செய்து உத்தரவிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுகள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5%, 18% வரிகள் மட்டும் இனி செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு விசயங்களுக்காக வரிகள் அதிரடியாக குறைந்தன.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை (PM Narendra Modi Latest Speech):
இந்த விஷயம் குறித்து நேற்று (செப்டமபர் 21) மாலை சுமார் 5 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வரி என ஏராளமான மறைமுக வரிகள் இருந்தன. அவை அனைத்தையும் மாற்றி ஜிஎஸ்டி இந்தியாவின் வளர்ச்சிப்பயணத்துக்கு புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. தற்போதைய ஜிஎஸ்டி புதிய சீர்திருத்த நடவடிக்கை காரணமாக நாட்டு மக்கள் 2 லட்சம் கோடி அளவில் சேமிப்பு செய்யலாம். இதனால் நாட்டின் மக்களிடம் பணம் புழங்கும். ஜிஎஸ்டி வரி திருத்தத்தால் ஏராளமான சிறுவணிகர்கள் பயன் அடைவார்கள். புதிய ஜிஎஸ்டி திருத்தும் இந்தியாவுக்கானது, இந்தியர்களுக்கானது. நாடு விரைவில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். அதுவே நமது இலக்கு" என பேசினார். மேலும், இன்று முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி புதிய வரிகளின் கீழ் பல்வேறு பொருட்களின் விலை குறையும் எனவும் குறிப்பிட்டார். IND Vs PAK Asia Cup 2025: மாஸ் வெற்றி! இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 போட்டியில் அசத்தல்.! மாயாஜாலம் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.!
ஜிஎஸ்டி வரி நீக்கம் செய்யப்படும் பொருட்கள் (GST Zero Tax Items):
உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 12% வரி பூஜ்ஜியமாக குறைக்கப்படுகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியும் நீக்கப்படுகிறது. மாணவர்களுக்கான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி வரியும் முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஆயுள் காப்பீடு ஜிஎஸ்டி வரம்புக்குள் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
5% ஜிஎஸ்டி வரி பொருட்கள் (5% GST Slab Products):
வீட்டு உபயோக பொருட்கள் உட்பட சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது. அதன்படி ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை உட்பட பராமரிப்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், டயப்பர் போன்றவற்றிற்கான வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. வெண்ணெய், பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. தையல் இயந்திரம், அதற்கான உதிரி பாகம், நொறுக்கு தீனிகள் போன்றவற்றுக்கான வரையும் 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. மருத்துவ துறையில் தர்மா மீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனை பொருட்கள், கண்ணாடி மீதான வரி 5% ஆக குறைக்கப்படுகிறது. வேளாண் துறை சார்ந்த கருவிகள், டிராக்டர் பாகங்கள், அதற்கான டயர் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 18ல் இருந்து 5% ஆக குறைகிறது. உயிரி பூச்சிக்கொல்லிகள், சொட்டு நீர் பாசன அமைப்புகள், தோட்டக்கலை இயந்திரம், வேளாண் இயந்திரம் போன்றவற்றிற்கான வரியும் 12%ல் இருந்து 5% ஆக குறைகிறது.
28% வரி பொருட்கள் மற்றும் 40% வரி பொருட்கள் (28% GST Items List & 40% GST Slab List):
ஆட்டோ, இருசக்கர வாகனம், சரக்கு வாகனம், ஏசி, டிவி, கார் போன்ற பொருட்களுக்கான வரி 28%ல் இருந்து 18% ஆக குறைகிறது. சிகரெட், பான் மசாலா, கார்பனேற்ற குளிர்பானங்கள் போன்றவற்றுக்கான வரி 28%ல் இருந்து 40% ஆக உயர்த்தி சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 1500 சிசி மேல் உள்ள சொகுசு பைக்குகள், இருசக்கர வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்களுக்கான வரி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 350 சிசி மற்றும் அதற்கு அதிகமான இருசக்கர வாகனங்கள், படகுகள், காஃபின் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விமானங்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்கப்பட இருக்கிறது. ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட் விலைக்கு 40% வரி அறிவிக்கப்பட்டுள்ளது.