Indian Passport Visa: புறப்படலங்களா?.. பாஸ்போர்ட் விசா இல்லாமல் இந்தியர்கள் செல்ல அனுமதியுள்ள 58 நாடுகள் எவை?.. லிஸ்ட் இதோ..!

நம்மை போன்று உள்ள மனிதர்கள் வெவ்வேறு நாடுகளில் அவர்களின் காலநிலைக்கு ஏற்ப எப்படி வாழுகிறார்கள்? என்பதை அறியவும், அங்குள்ள ஆச்சரியப்படவைக்கும் இயற்கையான சுற்றுலா தளங்களும், அதுகுறித்த தகவலுமே நம்மை அங்கு ஈர்த்து செல்லும்.

List Of Countries Indians Travel Without Visa

டிசம்பர், 9: உலகளவிலான சுற்றுலா என்பது மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆர்வம் ஆகும். அதனை எப்போதும் மறைக்க இயலாது. நம்மை போன்று உள்ள மனிதர்கள் வெவ்வேறு நாடுகளில் அவர்களின் காலநிலைக்கு ஏற்ப எப்படி வாழுகிறார்கள்? என்பதை அறியவும், அங்குள்ள ஆச்சரியப்படவைக்கும் இயற்கையான சுற்றுலா தளங்களும் (Natural Tourist Places), அதுகுறித்த தகவலுமே நம்மை அங்கு ஈர்த்து செல்லும்.

பூமியில் நாடுகளின் பிரிவுக்கு பின்னர் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்ய Passport & Visa என்று அழைக்கப்படும் கடவுச்சீட்டு கட்டாயமாக்கப்பட்டது. தனிநபர் எந்த நாட்டில் எதற்காக பயணம் செய்கிறார் என்ற விபரத்தை பதிவேற்ற அவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில், சொந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடுகள் பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு ஆவணங்களை சரிபார்த்து விசா வழங்கி வருகிறது.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்ய, அந்நாட்டின் எல்லைக்குள் பயணிக்க, எல்லையை கடந்து பயணிக்க அந்தந்த நாட்டு அரசால் பாஸ்போர்ட், விசா போன்றவை வழங்கபடுகிறது. சொந்த நாட்டின் குடிமகனுக்கு பாஸ்போர்ட்டும், வெளிநாட்டில் இருந்து வரும் நலன்விரும்பிக்கு விசாவும் வழங்கபடுகிறது. Bitcoin Chain Link: பிட்காயினை பாதுகாக்கும் சிறப்பம்சம் எது?.. ஹேக்கிங் செய்ய முடியாத ரகசியம் இதுதான்..! 

Passport

ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் 191 நாடுகளுக்கு விசா இன்றி பணம் செய்யலாம். சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் 190 நாடுகளும், தென்கொரியா பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் 189 நாடுகளுக்கும் பயணம் செய்யலாம். இந்தியாவை பொறுத்தமட்டில் இந்திய பாஸ்போர்ட் வைத்து விசா இல்லாமல் 58 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.

இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளை சேர்ந்தோர் அவர்கள் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு 32 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணம் செய்ய இயலும். இந்தியர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யும் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு;

ஆசிய கண்டம்: பூட்டான், கம்போடியா, லாவோஸ், இந்தோனேஷியா, மாலத்தீவு, மக்காவ், நேபாளம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை, திமோர்-லெஸ்ட.

ஐரோப்பிய கண்டம்: செர்பியா

ஆப்பிரிக்க கண்டம்: எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, மடகாஸ்கர், போட்ஸ்வானா, ஜிம்பாவே, மொரீஷியஸ்  உட்பட 21 நாடுகள்.

பசுபிக் பெருங்கடல்: ஓசோனியா குக் தீவு, பிஜி, மார்ஷல் தீவு உட்பட 9 நாடுகள்.

அமெரிக்கா: ஜமைக்கா உட்பட 11 கரீபியன் நாடுகள், பொலிவியா, எல்-சல்வடோர்.

மத்திய கிழக்கு: ஈரான், ஜோர்டான், கத்தார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 06:35 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement