Lord Iyappa: ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?... சுவாமியே சரணம் ஐயப்பா.!
ஐயப்ப பக்தர்கள் விரதம் போன்ற விஷயங்களில் ஒருவேளை கட்டாயம் பட்டினி கிடைக்க வேண்டுமா? என்றால் அது அவசியம் இல்லை.
டிசம்பர், 10: கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் சபரிமலை (Swamy Ayappa Temple, Sabarimala, Kerala) செல்ல விரதம் இருக்க முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டனர். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இன்று காணலாம்.
விரதம் போன்ற விஷயங்களில் ஒருவேளை கட்டாயம் பட்டினி கிடைக்க வேண்டுமா? என்றால் அது அவசியம் இல்லை. இன்றுள்ள நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் பட்டினி இருந்தால் அது அவர்களின் உடல்நலனை மேற்படி பாதிக்கும். விரதத்தின் நோக்கம் ஆரோக்கியமான காய்கறிகள் போன்ற உணவை அளவுடன் சாப்பிடுவதே. ஆக அளவோடு ஆரோக்கிய உணவுகளை சாப்பிடலாம்.
உடலை தூய்மைப்படுத்த அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். மனதை எப்போதும் அவனின் நாமத்தை கூறி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல, ஐயப்ப பூஜை என்று யாருக்கும் எந்த இடையூறுகளையும் செய்தல் கூடாது. நான் பல ஆண்டுகள் மலைக்கு சென்றுள்ளேன் என்ற பெருமிதமும் வேண்டாம். EarBuds Problem: உங்களின் இயர்பட்ஸ் ஒருபக்கம் கேட்கவில்லையா?.. என்ன காரணமாக இருக்கும்?.. அசத்தல் டிப்ஸ்., பைசா செலவில்லாமல் இதோ..!
இருமுடி கட்டும் நிகழ்வுக்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து பெரும் அன்பளிப்பு ஐயப்ப பக்தர் விதிமுறைக்கு எதிரானது. அவர்கள் கொடுக்கும் காணிக்கை பொருட்களை சன்னிதானத்தின் உண்டியலில் சேர்க்க வேண்டுமே தவிர்த்து அதனை உபயோகம் செய்ய கூடாது. சபரிமலைக்கு செல்லும் வழியில் அல்லது திரும்பி வரும்போது பிற கோவில்களுக்கு சென்று தரிசிக்க நேர்ந்தால், அங்கு எந்த தெய்வம் இருக்கிறதோ அந்த தெய்வத்தின் நாமத்தை உச்சரிப்பது நல்லது.
மாறாக, ஐயப்பனா? தரிசிக்க சென்ற தெய்வமா? என்று உங்களுக்குள் போட்டி பொறாமையோடு எதிர்ப்பு கோஷம் எழுப்புவது நல்லதல்ல. யாத்திரையின் போது ஆடம்பரமான உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியது. ஐயப்ப வழிபாட்டினை ஆக்ரோசத்துக்கும், ஆவேசத்துக்கும், ஆடம்பரத்திற்கும் பயன்படுத்தாமல் அமைதியாக மேற்கொள்வதே அனைவருக்கும் நல்லது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 08:17 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)